நேற்று அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று இரவு ஈரான் மீது “மிகவும் கடுமையான” தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளமை மத்திய கிழக்கில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மேலும், ஈரான் மீது மீண்டும் கடற்படை முற்றுகையை விதிப்பதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.
ஈரான் நாட்டுக்குச் சொந்தமான 28 கப்பல்கள் மீது தாக்குதல்
துருக்கியில் நடைபெற்றுவரும் நேட்டோ கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஸெலென்ஸ்கியை சந்திக்கும் முன்பு செய்தியாளர்களுடன் டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது,

ஈரான் நாட்டுக்குச் சொந்தமான 28 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம். அந்நாட்டு கப்பல்கள் மீதான இந்த தாக்குதல் மேலும் அதிகரிக்கக்கூடும்.
இன்று இரவு அவர்கள் மீது கடுமையான தாக்குதல்
சிறிய எச்சரிக்கை ஒன்றைக் கொடுக்கிறேன். இன்று இரவு அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம்.
ஈரான் நாட்டில் 80 இடங்களைக் குறி வைத்துள்ளோம். விமானப் படைத்தளம், துறைமுகம், கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவையும் இதில் அடங்கும் என எச்சரித்துள்ளார்.

சர்வதேச வணிக போக்குவரத்து நடைபெற்று வரும் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க ஆதரவு நாடுகளின் 3 கப்பல்கள் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி கொடுக்கும் விதமாக ட்ரம்ப் இவ்வாறு பேசி வருகிறார். இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

