மத்திய சிவில் பணிகள் (ஓய்வூதியம்) விதிகள், 2021 மற்றும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS), 1995 ஆகியவற்றின் படி, சட்டப்பூர்வமான கணவர் பொதுவாகக் குடும்ப ஓய்வூதியத்தைப் பெற உரிமை பெற்றுள்ளார். இருப்பினும், பொருந்தக்கூடிய திட்டத்தைப் பொறுத்து தகுதி வரம்புகள், விலக்குகள் மற்றும் ஓய்வூதியத்தைக் கணக்கிடும் முறை ஆகியவை மாறுபடுகின்றன. மறைந்த மனைவி ஒரு அரசு ஊழியராகவோ அல்லது ஓய்வூதியம் பெறுபவராகவோ இருந்தால், கணவர் குடும்ப ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியுடையவர் ஆவார். அதேபோல, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மறைந்த உறுப்பினர் இத்திட்டத்தின் வரம்பிற்குள் இருந்து, அதன் விதிமுறைகளைப் பூர்த்தி செய்திருந்தால், கணவர் ஓய்வூதியத்தைப் பெற முடியும் என்று ‘பென்ஷன் பாக்ஸ்’ (Pensionbox) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குல்தீப் பராஷர் தெரிவித்தார்.


