டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் நிலைமை ரொம்ப மோசம்.. மார்கன் ஸ்டான்லி சொன்ன பகீர் தகவல்!
இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கான காலாண்டு முடிவுகளை வெளியிடும் சீன் என்பதால், ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் கண்களும் இதன் மீது உள்ளது. இந்திய வேலைவாய்ப்பு சந்தைக்கும் சரி, பங்குச்சந்தைக்கும் சரி, ஐடி துறை மிகப்பெரிய பலம்.
ஆனால் ஏஐ துறையின் வளர்ச்சி காரணமாக ஒட்டடுமொத்த ஐடி துறை பங்குகளும் பெரும் சரிவை எதிர்கொண்டு உள்ளது, இந்த நிலையில் இக்காலாண்டு முடிவுகள் தான் இத்துறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான விஷயமாக முதலீட்டாளர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, எல்டிஐமைண்ட்ட்ரீ பங்குகள் தற்போது அதன் உச்ச விலையில் இருந்து சுமார் 50 சதவீதம் வரையில் சரிவை சந்தித்துள்ளது. மேலும் டாப் 10 ஐடி நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதன் உச்ச அளவில் இருந்து சுமார் 17 லட்சம் கோடி ரூபாய் வரையில் இழந்துள்ளது.
தற்போது முதலீட்டாளர்களின் ஒரே எதிர்பார்ப்பு என்னவென்றால் இந்த காலாண்டு முடிவுகளின் சீசன் மூலம் இழந்த 17 லட்சம் கோடி ரூபாய் மீட்டு எடுக்க முடியுமா இல்லையா என்பது தான். இதேவேளையில் இந்த காலாண்டு சீசன் எப்படி இருக்கும் என்பதை மோர்கன் ஸ்டான்லி தனது கணிப்புகளை தெரிவித்துள்ளது.
இதில் 2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு அதாவது ஜூன் காலாண்டில் மந்தமான முடிவுகளையும், 2வது காலாண்டில் குறைவான வளர்ச்சியை பதிவு செய்யும் வகையில் அறிவிப்புகளை வெளியிடும் என மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. மேலும் 2027ஆம் நிதியாண்டுக்கான மொத்த revenue guidance அளவுகளும் குறையும், அதேபோல் பெரிய ஐடி நிறுவனங்களுக்கான வருவாய் கணிப்புகள் அதிகமாக குறையும் எனவும் தெரிவித்துள்ளது.
உதாரணமாக டிசிஎஸ் நிறுவனத்தின் தரத்தை equal-weight ஆக குறைத்துள்ளது, டிசிஎஸ் பங்கு அக்சென்சர் நிறுவனத்தை காட்டிலும் ப்ரீமியம் விலையில் இருப்பதாகவும், இது மொத்த ஐடி துறைக்கு இது பெரும் ரிஸ்க் ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதோடு இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனங்களின் வருவாய் இக்காலாண்டில் 1.5 – 3.5 சதவீதம் வரையில் மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளது. இதேபோல் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் இக்காலாண்டில் மைனஸ் அளவில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
இந்திய ஐடி துறையின் இந்த நிலைக்கு ஏஐ ஒரு காரணமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் மிகவும் காலதாமதமாக முடிவுகளை எடுப்பதாகவும், விலை போட்டி அதிகமாக இருப்பதாகவும், ஏஐ துறையில் அதிகளவிலான முதலீடு செய்யப்படுகிறது. இதனால் வழக்கமாக கிடைக்கும் திட்டங்கள் கூட பெரும் போராட்டத்திற்கு பின்பு பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
காலாண்டு முடிவு வெளியாகும் தேதி
டிசிஎஸ் (TCS) ஜூலை 9, எல்டிஐ மைண்ட்ட்ரீ (LTIMindtree) ஜூலை 11, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCL Tech) ஜூலை 13, எல் அண்ட் டி டெக்னாலஜி (LTTS) ஜூலை 14, விப்ரோ (Wipro) ஜூலை 16, டெக் மஹிந்திரா (Tech Mahindra) ஜூலை 16, டாடா டெக்னாலஜிஸ் (Tata Tech) ஜூலை 17, இன்ஃபோசிஸ் (Infosys) ஜூலை 23, எம்பாசிஸ் (Mphasis) ஜூலை 23, கோஃபோர்ஜ் (Coforge) ஜூலை 27,
