
நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், சுமார் 16 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தண்டனை அனுபவிக்கும் கைதிகள் மற்றும் சாதாரண கைதிகளுக்கிடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

