Last Updated:
மும்பையில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளில் ஆறு போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. மும்பை மாநகரில் கடந்த நான்கு நாட்களில் 58 சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளது.
குறிப்பாக, நேற்று ஒரே நாளில் 25 சென்டிமீட்டர் மழை கொட்டியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மும்பையில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளில் ஆறு போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது நீண்ட நாள் காதலி கவுரி ஸ்ப்ராட்டை இன்று கரம் பிடித்திருக்கும் நிலையில், அவரது வீடு அமைந்துள்ள பந்த்ரா பகுதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
#WATCH | Mumbai, Maharashtra: Reliance Industries Limited Chairman and Managing Director Mukesh Ambani arrives at the residence of actor Aamir Khan.
Actor Aamir Khan and Gauri Spratt are getting married today at the actor’s Mumbai home. pic.twitter.com/i1kHBCuMta— ANI (@ANI) July 5, 2026
ராய்காட் மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சாலைகளில் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்ததால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.
மும்பை – கோவா நெடுஞ்சாலையிலும் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லோனாவாலா பகுதியில் உள்ள ராஜ்மாச்சி கோட்டைக்குச் செல்லும் சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, வாகனப் போக்குவரத்து முடங்கியது.
மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ராம்காட்டில் உள்ள ஷிப்ரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த ஆற்றங்கரையோரத்தில் உள்ள கோயில்கள் நீரில் மூழ்கின.
Mumbai,Maharashtra


