பல நூற்றாண்டுகளாக தங்கத்தில் முதலீடு செய்வது என்பது இந்தியாவில் பிரபலமான ஒரு முதலீட்டு ஆப்ஷனாக இருந்து வருகிறது. இது செல்வம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்துக்கான ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.
இந்திய கலாச்சாரத்தில் திருமணங்கள் அல்லது சிறப்பு நிகழ்வுகளின்போது தங்கத்தை பரிசளிப்பது ஒரு வழக்கமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. தங்க நகைகள், காயின்கள், பார்கள் போன்றவற்றை வாங்கி தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு அற்புதமான முதலீட்டு யோசனை. எனினும், முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதற்கு முன்பு அது போலியானதா அல்லது நல்ல தரம் கொண்டதா என்பதை சோதித்துப் பார்ப்பது அவசியம்.
அக்ஷய திருதியை திருநாளில் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கம் வாங்குவதற்கு நகைக்கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிவது வழக்கம். ஆனால் தங்கம் வாங்குவதற்கு முன்பு அதன் தூய்மையை தெரிந்து கொள்வதற்கு இருக்கக்கூடிய ஒரு சில வழிகளை பற்றியும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
தங்கத்தின் தூய்மை கேரட்டுகளில் அளவிடப்படுகிறது. 24 கேரட் தங்கம் என்பது தங்கத்தின் தூய்மையான வடிவமாக கருதப்படுகிறது. ஆனால் இது சற்று மென்மையாக இருப்பதால் பிற உலோகங்கள் கலந்து நகைகள் செய்யப்படுகிறது. 18k தங்கத்தில் 18 பகுதிகள் தங்கமும் 6 பகுதிகள் பிற உலோகங்களும் அடங்கியுள்ளன. அதாவது நாம் வாங்கும் நகைகளில் 75 சதவீதம் தூய்மையான தங்கம் உள்ளது.
மேலும் படிக்க: PAN கார்டு இல்லாமலேயே சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள முடியுமா? முழு தகவல் இதோ!
வினிகர் சோதனை
தங்கத்தில் நீங்கள் வினிகர் சோதனை செய்வதன் மூலம் அதன் தூய்மைத் தன்மையை தெரிந்து கொள்ளலாம். தங்கத்தின் மீது ஒரு சில துளிகள் வினிகர் சாறு சேர்த்து காத்திருக்கவும். நிறத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அது தூய்மையற்ற தங்கமாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க:
காசோலையின் பின்பக்கம் கையொப்பம் போடசொல்வது ஏன் தெரியுமா..? பலருக்கும் தெரியாத காரணம்!
காந்த சோதனை
தங்கத்தின் தூய்மையை சரி பார்ப்பதற்கான எளிமையான மற்றும் குறைந்த செலவு வழி என்றால் அது காந்த சோதனை தான். உலோகங்களுக்கு காந்த பண்புகள் உண்டு. எனினும் தங்கம் வினைபுரியாத தன்மை கொண்ட மற்றும் காந்த பண்புகள் அல்லாத ஒரு உலோகம். உண்மையான தங்கத்தை காந்தத்தின் அருகில் நீங்கள் வைக்கும்போது அது காந்தத்தை நோக்கி ஈர்க்கப்படாது. இவ்வாறு உங்களிடம் இருக்கும் தங்கம் தூய்மையானதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அமில சோதனை
தங்கத்தின் தூய்மையை கண்டுபிடிப்பதற்கு மிகவும் எளிமையான சோதனை இது. ஹைட்ரோ குளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் மற்றும் ஒரு கல்லை எடுத்துக் கொள்ளவும். கல் மீது தங்கத்தை உரசி அதில் அமிலத்தை சேர்க்கவும். தங்கம் அல்லாத பிற உலோகத்தில் அமிலம் கரையக்கூடும்.
மிதப்பு சோதனை
தங்கம் நீரில் மிதக்காது. ஆனால் அதில் பிற உலோகங்கள் அதிகமாக கலந்து இருக்கும் பட்சத்தில் அந்த தங்கம் நீரில் மிதக்க ஆரம்பிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
