Last Updated:
சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்வோருக்கு 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
ரஷ்யாவில் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளைக் குறிவைத்து உக்ரைன் ராணுவம் கடந்த வாரம் டிரோன்களை ஏவி கடும் தாக்குதலை நடத்தியது. இதன் காரணமாக, ரஷ்யாவில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் இல்லை என்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோலியத் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் அண்டை நாடுகளிலிருந்து பெட்ரோலியத்தை வாங்குவதற்கு ரஷ்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, கிராஸ்னோடர் பிராந்தியத்தில் ஆயிரம் லிட்டர் பெட்ரோலைக் கடத்திச் சென்ற 2 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்வோருக்கு 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.


