Last Updated:
NEET | நீட் மறுதேர்வில் இயற்பியல் பிரிவில் 2 கேள்விகள் தவறாக இருந்தன. ஒரு கேள்விக்கு போனஸ் மதிப்பெண், மற்றொரு கேள்விக்கு 2 சரியான பதில்கள்.
வினாத்தாள் கசிவால் மீண்டும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் இயற்பியல் பிரிவில் இரண்டு கேள்விகள் தவறாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதால், கடந்த ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற்றது.
அந்த தேர்விலும் இயற்பியல் வினாத்தாளில் இரண்டு தவறுகள் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில், வெர்னியர் காலிப்பர்ஸ் குறித்த 40-ஆவது கேள்விக்கு கொடுக்கப்பட்ட நான்கு ஆப்ஷன்களுமே தவறானவை.
அதன் சரியான விடை 1.6 செ.மீ என்ற நிலையில், அது ஆப்ஷன்களில் இல்லை. அதனால் அந்த கேள்வியை Dropped என தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதாவது, ஒரு கேள்வி தவறாகவோ அல்லது ஆப்ஷன்கள் தவறாகவோ இருந்தால் அந்த கேள்வி Dropped என அறிவிக்கப்பட்டு விடை எழுதியிருந்தாலும், இல்லாவிட்டாலும் 4 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும்.
அதேபோல் மின்காந்த அலைகள் குறித்த 22-ஆவது கேள்விக்கு 3 மற்றும் 4 ஆகிய இரண்டு ஆப்ஷன்களுமே சரியான விடைகளாகும். அதனால், 2-இல் எதனை தேர்வு செய்திருந்தாலும் மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


