• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

53,500 பேருக்கு வேலை… $11.5 பில்லியன் அலுமினியம் மெகா திட்டத்தை தொடங்கும் அதானி – IRH! | Adani Enterprises, IRH to Build $11.5 Billion Aluminium Mega Project in Odisha

GenevaTimes by GenevaTimes
July 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
53,500 பேருக்கு வேலை… $11.5 பில்லியன் அலுமினியம் மெகா திட்டத்தை தொடங்கும் அதானி – IRH! | Adani Enterprises, IRH to Build $11.5 Billion Aluminium Mega Project in Odisha
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

-Vigneshkumar

Time
Updated: Friday, July 3, 2026, 11:34 [IST]

இந்தூர்: அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அபுதாபியைச் சேர்ந்த IRH நிறுவனம் ஆகியவை இணைந்து, ஒடிசாவில் சுமார் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 1.08 லட்சம் கோடி) மதிப்பிலான ஒருங்கிணைந்த அலுமினிய திட்டத்தை உருவாக்க ஒடிசா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்த மாபெரும் திட்டம் 50:50 என்ற விகிதத்திலான கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இது ஒடிசா மாநிலத்தின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாகவும், இந்தியாவின் உலோகத் துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய வெளிநாட்டு முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

Adani and IHC sign landmark Odisha aluminum deal

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

இந்த பிரம்மாண்டமான கிரீன் எனர்ஜி திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 4 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட அலுமினா சுத்திகரிப்பு ஆலை, 2 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட அலுமினியம் உருக்காலை, 4,000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் மற்றும் 1 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட உற்பத்தி பூங்கா ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்த ஒருங்கிணைந்த திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டத்தில் சுமார் ரூ. 66,000 கோடியும், இரண்டாம் கட்டத்தில் சுமார் ரூ. 44,000 கோடியும் முதலீடு செய்யப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி

இந்தத் திட்டம் ஒடிசா மாநிலத்தில் பல ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கட்டுமானப் பணிகளின் போது சுமார் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆலைகள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் போது சுரங்கம், சுத்திகரிப்பு, அலுமினியம் உற்பத்தி மற்றும் கீழ்நிலை உற்பத்திப் பிரிவுகளில் நேரடியாகச் சுமார் 18,500 பேருக்கு வேலைகள் கிடைக்கும். இது தவிர போக்குவரத்து, பொறியியல், பராமரிப்பு மற்றும் இதர துணைத் தொழில்கள் மூலமாகவும் ஒடிசாவில் கணிசமான மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்த முதலீட்டின் மூலம் சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு முதல் இறுதி தயாரிப்பு வரையிலான ஒடிசாவின் அலுமினிய தொழில் சங்கிலி மேலும் வலுப்பெறும் என்றும், உலகளாவிய அலுமினிய சந்தையில் ஒடிசாவின் பங்கு அதிகரிக்கும் என்றும் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். இந்த கூட்டு முயற்சி ஒடிசாவின் நீண்டகால தொழில் வளர்ச்சிக்கு உதவுவதோடு, இந்தியாவின் தொழில்முறைப் போட்டித்தன்மையை மேம்படுத்தும் என அதானி குழுமம் மற்றும் ஐஎச்சி குழுமத்தின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல், அரசு ஒப்புதல்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடல் போன்ற அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

English summary

Adani Enterprises and Abu Dhabi-based International Resources Holding will jointly invest $11.5 billion in a massive integrated aluminium project in Odisha: மிக பெரிய முதலீடு செய்யும் அதானி அலுமினியம்

Read More

Previous Post

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்து!

Next Post

தங்கம், வெள்ளி விலையில் திடீர் மாற்றம்: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? | Today Gold Silver Rate Live: why the gold rate is increasing again?

Next Post
தங்கம், வெள்ளி விலையில் திடீர் மாற்றம்: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? | Today Gold Silver Rate Live: why the gold rate is increasing again?

தங்கம், வெள்ளி விலையில் திடீர் மாற்றம்: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? | Today Gold Silver Rate Live: why the gold rate is increasing again?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin