• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வாழ்க்கை ஒரு வட்டம்.. அன்றைக்கு ஓரம்கட்டிய ஜாபர் அலி மகன் அமைச்சர் பர்வேஸ் உடன் இன்று விஜயபாஸ்கர்! | Once Opposed Jaffer Ali, Now Backed by His Son: C Vijayabaskar’s TVK Move Sparks Buzz

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வாழ்க்கை ஒரு வட்டம்.. அன்றைக்கு ஓரம்கட்டிய ஜாபர் அலி மகன் அமைச்சர் பர்வேஸ் உடன் இன்று விஜயபாஸ்கர்! | Once Opposed Jaffer Ali, Now Backed by His Son: C Vijayabaskar’s TVK Move Sparks Buzz
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vignesh Selvaraj

Time
Updated: Friday, July 3, 2026, 15:45 [IST]

புதுக்கோட்டை: சி. விஜயபாஸ்கருக்கு வாழ்க்கை ஒரு முழு வட்டமாக பூர்த்தி அடைந்துள்ளது என்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட அரசியல் பிரமுகர்கள். இன்றைக்கு அமைச்சராக இருக்கும் முகமது பர்வேஸின் தந்தை ஜாபர் அலியை ஓரம்கட்டி புதுக்கோட்டை அரசியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் விஜயபாஸ்கர். தற்போது, முகமது பர்வேஸ் தயவுடன் தவெகவில் இணைந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு 4வது முறையாக வெற்றி பெற்ற சி. விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை 37 நாட்களில் ராஜினாமா செய்துவிட்டு தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.

Once Opposed Jaffer Ali Now Backed by His Son C Vijayabaskar s TVK Move Sparks Buzz

தவெகவில் விஜயபாஸ்கர்

சி. விஜயபாஸ்கர் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தவெகவில் இணைந்தார். அதிமுகவைச் சேர்ந்த மாஜிக்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ்.வளர்மதி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்துள்ளனர்.

ஜாபர் அலி

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக அமைச்சர் முகமது பர்வேஸுக்கும், விஜயபாஸ்கருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பர்வேஸின் தந்தை ஜாபர் அலி, புதுக்கோட்டை அதிமுக நகரச் செயலாளராக இருந்தவர். ஜாபர் அலி, அப்போதைய அதிமுக அமைச்சரும், தற்போதைய திமுககாரருமான எஸ்.ரகுபதியின் வலதுகரமாக விளங்கியவர்.

ரகுபதி திமுகவுக்கு சென்ற பிறகு, அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டார் ஜாபர் அலி. ஜாபர் அலிக்கு பதிலாக விஜயபாஸ்கர் முன்னணிக்கு கொண்டு வரப்பட்டார். ஜாபர் அலியை ஓரம்கட்டி, தனது செல்வாக்கை நிலைநிறுத்திக்கொண்டார் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை அதிமுகவின் முகமாக உருவெடுத்தார்.

ஓரங்கட்டிய விஜயபாஸ்கர்

2013 ஆம் ஆண்டு வாக்கில் புதுக்கோட்டை நகர கூட்டுறவு தேர்தலில் அதிமுகவினர் இடையே மோதல் எழுந்தது. ஜாபர் அலியை மனு செய்ய விடாமல் தடுத்து, தனது தந்தை வெல்வதற்காக விஜயபாஸ்கர் ஜாபர் அலி மீது புகார் கொடுக்க வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீன் கிடைத்த நிலையில் வேறொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்குப் பின்னணியில் விஜயபாஸ்கர் இருந்ததாக ஒரு பேச்சு உண்டு.

ஜாபர் அலி மகன் பர்வேஸ்

அந்த ஜாபர் அலியின் மகன் தான் இன்றைய தவெக அமைச்சர் முகமது பர்வேஸ். மாப்பிள்ளை மாப்பிள்ளை என தற்போது வாய்க்கு வாய் பர்வேஸை அழைத்து வருகிறார் விஜயபாஸ்கர். எந்த ஜாபர் அலிக்கு கீழே விஜயபாஸ்கர் தன் அரசியல் வாழ்வை துவங்கி அவரை விட மேலே வந்தாரோ, அதே ஜாபர் அலியின் மகனுக்கு கீழே தனது அடுத்த அரசியல் இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார் விஜயபாஸ்கர்.

வாழ்க்கை ஒரு வட்டம்

இன்றைக்கு விராலிமலை எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் உரிய இடத்துக்காக காத்திருக்கிறார் விஜயபாஸ்கர். ஜாபர் அலியின் மகனோ, புதுக்கோட்டை மாவட்டத்தின் இன்றைய பொறுப்பு அமைச்சர். பர்வேஸின் தந்தையை அரசியலில் காலி செய்த விஜயபாஸ்கர், இன்று பர்வேஸுக்கு துணையாக, அவருடன் இணக்கமாகச் செல்லவேண்டிய நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது காலம், இதுதான் வாழ்க்கை ஒரு வட்டம் என்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட அரசியல் பார்வையாளர்கள்.

English summary

Political figures in Pudukkottai district say that life has come full circle for C Vijayabaskar. Vijayabaskar had once carved a niche for himself in Pudukkottai politics by sidelining Jaffer Ali—the father of the current minister, Mohamed Farvas. Now, he has joined TVK with the support of Mohamed Farvas.

Read More

Previous Post

போலந்தை இலக்கு வைத்து ரஷ்யா! அமெரிக்க உளவுத்துறை தகவலால் பதற்றம்

Next Post

சென்னை – போத்தனூர் சிறப்பு ரயில்கள்: பயணிகளுக்கு நிம்மதி தரும் தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு! | Chennai To Podanur Special Trains Announced: Southern Railway Updates For July-August 2026

Next Post
சென்னை – போத்தனூர் சிறப்பு ரயில்கள்: பயணிகளுக்கு நிம்மதி தரும் தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு! | Chennai To Podanur Special Trains Announced: Southern Railway Updates For July-August 2026

சென்னை - போத்தனூர் சிறப்பு ரயில்கள்: பயணிகளுக்கு நிம்மதி தரும் தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு! | Chennai To Podanur Special Trains Announced: Southern Railway Updates For July-August 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin