நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோடைக்காலம் முழுவதுமாக துவங்கி இருக்கும் நிலையில், நடப்பாண்டில் கோடையின் தாக்கம் மிக அதிகமாக உணரப்படுகிறது. இதற்கு சாட்சியாக பசுமை நகரம் என்றழைக்கப்படும் கர்நாடக தலைநகரான பெங்களூருவில் வரலாறு காணாத வகையில் வெப்பம் அதிகரித்துள்ளதை சொல்லலாம்.
அங்கு கோடையில் கூட ஏசி தேவைப்படாது என்ற நிலை தான் கடந்த ஆண்டு வரை இருந்தது. ஆனால் இந்த ஆண்டோ நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. கோடையில் கூட எங்கள் பகுதி குளிர்ச்சியாக இருக்கும், ஏசி தேவை இல்லை என்று பெருமிதம் கொண்டவர்கள் கூட தற்போது உடனடியாக வீட்டில் AC வாங்கி மாட்டுவதற்கு அவசரம் காட்டுவதை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் கோடைக்காலத்தை முன்னிட்டு பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான அமேசான், கிரேட் சம்மர் சேல் என்ற சிறப்பு விற்பனையை தொடங்கி நடத்தி வருகிறது. அமேசானின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கோடைக்கால விற்பனையானது எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அற்புதமான தள்ளுபடிகளை வழங்குகிறது.
வரும் 7ஆம் தேதி வரை இந்த ஸ்பெஷல் விற்பனை நடைபெற உள்ளது. கோடைக்காலத்தை முன்னிட்டு மக்களின் AC தேவையை கருத்தில் கொண்டு இந்த விற்பனையின்போது பல முன்னணி பிராண்டுகளின் AC-க்கு அமேசான் சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகிறது.
AC-யில் பல வெரைட்டிகள் இருந்தாலும் வீட்டிற்கான தேவை என்று கருத்தில் கொள்ளும்போது மக்களிடையே 1.5 டன் ஸ்பிளிட் ஏசி மாடல் தான் மிகவும் பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2024 அமேசான் கோடைக்கால விற்பனையில் 1.5 டன் ஸ்பிளிட் ஏசி மாடல்களில் வழங்கப்படும் டாப் 5 டீல்களை இங்கே பார்க்கலாம்…
1. டெய்கின் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி (DAIKIN 1.5 TON 3 STAR INVERTER SPLIT AC):
ஏசி-க்களில் மிகவும் பிரபலமான பிராண்டாக இருக்கும் Daikin நிறுவனத்தின் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி-யின் அசல் விலை ரூ.58,400. இந்த சிறப்பு விற்பனையில் 37% தள்ளுபடியுடன் நீங்கள் இதனை வெறும் ரூ.36,990-க்கு வாங்கலாம்.
2. வோல்டாஸ் 1.5 டன் 5 ஸ்டார், இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி (VOLTAS 1.5 TON 5 STAR, INVERTER SPLIT AC):
இந்த ஏசி பொதுவாக ரூ.75,990 என்ற ரீடெயில் விலைக்கு விற்கப்படும். ஆனால் அமேசானின் இந்த சிறப்பு கோடைகால விற்பனையில் ரூ.37,990 என்ற குறைந்த விலையில் வாங்கலாம்.
3. எல்ஜி 1.5 டன் 5 ஸ்டார் டூயல் இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி (LG 1.5 TON 5 STAR DUAL INVERTER SPLIT AC):
இந்த ஏசி-யை 46% என்ற பெரிய தள்ளுபடியுடன் நீங்கள் வெறும் ரூ.46,590-க்கு அமேசானில் வாங்கலாம்.
4. பானாசோனிக் 1.5 டன் 3 ஸ்டார் வை-ஃபை இன்வெர்டர் ஸ்மார்ட் ஸ்பிளிட் ஏசி ( PANASONIC 1.5 TON 3 STAR WI-FI INVERTER SMART SPLIT AC):
MRP ரூ.55,400 கொண்ட இந்த ஏசி வெறும் ரூ.36,990-க்கு அமேசானின் இந்த சிறப்பு விற்பனையின்போது கிடைக்கிறது.
5. கேரியர் 1.5 டன் 3 ஸ்டார் ஏஐ ஃப்ளெக்ஸிகூல் இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி (CARRIER 1.5 TON 3 STAR AI FLEXICOOL INVERTER SPLIT AC):
சுமார் 48% தள்ளுபடியுடன், இந்த ஏசியை வெறும் ரூ.34,990-க்கு அமேசானின் இந்த சிறப்பு விற்பனையின்போது வாங்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
