• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

50% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகும் அமெரிக்க நிறுவனத்தின் இந்திய சிஇஓ!! பீதியில் ஐடி ஊழியர்கள்! | Palo Alto Networks CEO Nikesh Arora Plans 50% Job Cuts in Marketing, Finance & HR Over 3 Years Due to AI

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
50% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகும் அமெரிக்க நிறுவனத்தின் இந்திய சிஇஓ!! பீதியில் ஐடி ஊழியர்கள்! | Palo Alto Networks CEO Nikesh Arora Plans 50% Job Cuts in Marketing, Finance & HR Over 3 Years Due to AI
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


50% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகும் அமெரிக்க நிறுவனத்தின் இந்திய சிஇஓ!! பீதியில் ஐடி ஊழியர்கள்!

அமெரிக்காவின் முன்னணி சைபர் செக்யூரிட்டி நிறுவனமான பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ்-ன் சிஇஓவும், இந்தியருமான நிகேஷ் அரோரா, இந்நிறுவனத்தின் மார்கெட்டிங், பைனானன்ஸ் மற்றும் ஹெச்ஆர் பிரிவுகளில் 50 சதவீத ஊழியர்களை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் வேளையில், இதனை ஏற்றுக்கொண்டு பயன்படுத்தும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக அடுத்த 3 வருடத்தில் 50 சதவீத ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக நிகேஷ் அரோரா கூறியுள்ளது டெக் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகும் அமெரிக்க நிறுவனத்தின் இந்திய சிஇஓ!! பீதியில் ஐடி ஊழியர்கள்!

சமீபத்தில் நிகேஷ் அரோரா ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், இதில் அவர் பேசுகையில், அடுத்த 3 வருடத்தில் எங்களுடைய நிறுவனத்திந் ஜெனரல் மற்றும் அட்மினிஸ்ட்ரேடிவ் பணிகளில் இருக்கும் ஊழியர்களை பாதியாக குறைக்க உள்ளதாக தெரிவித்தார்.

ஜெனரல் மற்றும் அட்மினிஸ்ட்ரேடிவ் பணிகளில் அதிகப்படியான பிராசஸ் மேனேஜ்மென்ட் உள்ளது, இதை ஏஐ மூலம் திறம்பட இயக்க முடியும் என்பதாலேயே இத்தகைய முடிவை தான் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிகேஷ் அரோரா கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய முக்கிய நிர்வாகி ஆவார், ஒரு காலத்தில் கூகுளில் அதிகம் சம்பளம் வாங்கிய அதிகாரியாக திகழ்ந்தார். மேலும் இந்த பாட்காஸ்ட்டில் பேசுகையில், அடுத்த சில வருடத்தில் SAAS அப்பிளிகேஷன்களை ஏஐ மொத்தமாக ரீப்லேஸ் செய்துவிடும், ஏஐ மூலம் மேம்பட்ட முறையில் இயங்க முடியும், இதேபோல் ஏஐ அப்பிளிகேஷனுக்கு Opinion என்னும் விஷயம் உள்ளது, ஆனால் SAAS அப்பிளிகேஷனுக்கு அப்படியொரு விஷயம் இல்லை, இதனால் எளிதாக திறன் மேம்பாடு செய்ய முடியும் என நிகேஷ் அரோரா தெரிவித்தார்.

உதாரணமாக ஒரு மார்கெட்டிங் ரிப்போர்ட்-ஐ ஏஐ தளத்தில் கொடுத்தால், அதை ஆய்வு செய்து தற்போதைய சந்தை நிலைக்கு ஒப்பிட்டு அதை எப்படியிருக்கிறது என எளிதாக சொல்லிவிடும். இதுமட்டும் அல்லாமல் அறிக்கையில் எதை மாற்ற வேண்டும் என்பதையும் சொல்லிவிடும். இது ஒரு நிறுவனத்தின் சமானிய ஊழியரை பலமடங்கு திறமைசாலியாக மாற்றிவிடும் என்பதால் அதிகப்படியான ஊழியர்களும், அதிக தொகை கொடுத்து பயன்படுத்தும் SAAS அப்பிளிகேஷனும் தேவைப்படாது என தெரிவித்தார்.

தற்போது பாலோ ஆல்டோ நிறுவனத்தில் சுமார் 600 ஊழியர்கள் மார்கெட்டிங் பிரிவில் மட்டும் பணியாற்றி வருகிறார்கள். இனி வரும் காலத்தில் ஏஐ பயன்படுத்தி எப்படி அதிகப்படியான லாபத்தையும், வர்த்தகத்தையும் நிறுவனத்திற்கு கொண்டு வர முடியும் என்பதன் அடிப்படையிலேயே ஊழியர்களின் டிமாண்ட் இருக்கும்.

Share This Article

English summary

Palo Alto Networks CEO Nikesh Arora Plans 50% Job Cuts in Marketing, Finance & HR Over 3 Years Due to AI

Indian-origin CEO Nikesh Arora of Palo Alto Networks has announced plans to reduce nearly 50% of employees in marketing, finance, and HR functions within the next three years, citing AI’s ability to handle repetitive administrative tasks more efficiently. This move highlights the growing impact of AI on traditional SaaS models and white-collar jobs in the global tech sector.

Story first published: Friday, July 3, 2026, 18:23 [IST]

Other articles published on Jul 3, 2026

Read More

Previous Post

பிறந்தநாள் நண்பருக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்த பெண்! ஓட்டல் அறையில் நடந்த விபரீதம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மித்ரா மானியத் திட்டம்: தொடங்கிய 5 நாட்களில் அமோக வரவேற்பு

Next Post

மித்ரா மானியத் திட்டம்: தொடங்கிய 5 நாட்களில் அமோக வரவேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin