Last Updated:
இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர், பிகார் ஆளுநர், காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி இறுதிச் சடங்கில் பங்கேற்று உள்ளனர்.
ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் சவப்பெட்டியைப் பார்த்து பொதுமக்கள் கதறி அழுதுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் தெஹ்ரான் பகுதியில் நடத்திய தாக்குதலில் அலி கமேனி உயிரிழந்தார். மேற்காசியப் போர் முடிவுக்கு வந்த நிலையில், சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, அவரது உடல் முதல் முறையாக பொதுமக்களின் அஞ்சலிக்காக பொதுவெளியில் வைக்கப்பட்டது. அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியைப் பார்த்த பொதுமக்கள் கதறி அழுதனர்.
Indian Dignitaries Pay Tribute to the Martyred Leader of the Islamic Republic of Iran, Ayatollah Seyyed Ali Khamenei: Embassy of Iran in India pic.twitter.com/Yle0eOE55h
— IANS (@ians_india) July 3, 2026
வரும் 6-ஆம் தேதி அலி கமேனியின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால், தந்தையின் இறுதிச் சடங்கில் தற்போதைய உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு விடுத்திருந்தது. அதன்பேரில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் பஜித்ரா மார்கெரிட்டா, பிகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் இறுதிச் சடங்கில் பங்கேற்று மரியாதை செய்துள்ளனர்.


