• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி உச்சி மாநாடு: அரிய கனிமங்கள் மற்றும் பசுமை ஆற்றல் துறையில் இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டெல்லி உச்சி மாநாடு: அரிய கனிமங்கள் மற்றும் பசுமை ஆற்றல் துறையில் இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 02, 2026 3:09 PM IST

ஜப்பான் பிரதமர் சனாயே டகாய்ச்சி ஆகியோருக்கு இடையே ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன

ஜப்பான் பிரதமருடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி
ஜப்பான் பிரதமருடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் நடைபெற்று வரும் 16-வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர கூட்டு மாநாட்டில், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாக ‘பொருளாதாரப் பாதுகாப்பு கூட்டுறிக்கை’ மற்றும் ராணுவத் தளவாடங்களை இணைந்து தயாரிப்பதற்கான பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவிற்கு முதன்முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் சனாயே டகாய்ச்சி ஆகியோருக்கு இடையே ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மை, அதிநவீன தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் விநியோகம், பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே இந்த கூட்டுறிக்கையின் முதன்மை நோக்கமாகும்.

இந்த மாநாட்டின் மிக முக்கிய அம்சமாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவதற்கான ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர, செமிகண்டக்டர்கள் குவாண்டம் கணினியியல் , அரிய வகை கனிமங்கள், மேம்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் மருந்துத் தயாரிப்பு போன்ற முக்கிய துறைகளில் இரு நாடுகளும் தங்களின் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து பிரதமர் மோடி “இந்தியாவின் பொருளாதாரமும், ஜப்பானின் பொருளாதாரமும் ஒன்றையொன்று பூர்த்தி செய்யக்கூடியவை. கலாச்சாரம் முதல் நவீன தொழில்நுட்பம் வரை நமது சிந்தனையிலும் அணுகுமுறையிலும் அசாத்திய ஒற்றுமை உள்ளது,” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆற்றல் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவில் 1,000 பயோ-கேஸ் மற்றும் இயற்கை உர ஆலைகளை அமைப்பதற்கான ‘இந்தியா-ஜப்பான் பயோ-கேஸ் முன்முயற்சி’ தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தூய்மையான எரிசக்தி மாற்றத்தை நோக்கிய பயணத்தில், இந்தியாவில் பெரிய அளவிலான ‘பச்சை அம்மோனியா’ தயாரிப்பு திட்டத்திற்கு ஜப்பான் தனது ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

டெல்லி உச்சி மாநாடு: அரிய கனிமங்கள் மற்றும் பசுமை ஆற்றல் துறையில் இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தம்!

Read More

Previous Post

’முத்து’வின் தாக்குதலால் மாமா உயிரிழப்பு (வீடியோ)

Next Post

Gold Rate Update | மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை… தற்போதைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Rate Update | மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை… தற்போதைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Rate Update | மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை... தற்போதைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin