பொதுவாக, 30 வயதைக் கடந்த பிறகு, பலர் தங்கள் நிதி எதிர்காலம், குறிப்பாக ஓய்வுக்காலம் குறித்து தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்குகிறார்கள். இந்த வயதில், “முதலீடு செய்யத் தொடங்க மிகவும் தாமதித்துவிட்டோமோ?” என்ற கேள்வி பலரையும் அலைக்கழிக்கிறது. இருப்பினும், நிதி நிபுணர்களின் கருத்துப்படி, ஓய்வுக்காலத்திற்காக ஒரு பெரிய நிதியை உருவாக்கப் போதுமான காலம் இன்னும் உள்ள ஒரு பருவமாகவே 30 வயது கருதப்படுகிறது. 60 வயதில் ஓய்வு பெறுவது தான் இலக்கு என்றால், முதலீட்டாளருக்கு இன்னும் 30 ஆண்டுகள் என்ற நீண்ட கால அவகாசம் உள்ளது. இக்காலகட்டத்தில், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட முதலீடு மற்றும் கூட்டு வட்டியின் ஆற்றல் (power of compounding) ஆகியவற்றைப் பயன்படுத்தினால், ரூ.5 கோடி போன்ற பெரிய நிதி இலக்குகளை எளிதாக அடைய முடியும்.

