தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தோட்டக் கம்பனிகள் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் திங்கட்கிழமைவரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (31) தீர்மானித்துள்ளது.
நீதியரசர்கள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு நேற்று முன்தினம் (30) கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா விடயங்களை முன்வைத்தார். இதனையடுத்து சமர்ப்பணங்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் 03ஆம் திகதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அக்கரப்பத்தன பெருந்தோட்டக் கம்பனி உட்பட 21 தோட்டக் கம்பனிகளினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

&w=1200&resize=1200,675&ssl=1)