Last Updated:
அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் திட்டமிடவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானாலும், இரு நாடுகளும் தாக்குதலை தொடர்ந்துதான் வருகின்றன. இதையடுத்து, ஈரான் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாகவும், கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இதை திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் திட்டமிடவில்லை என விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம், ஈரானிய தூதுக்குழு கத்தாருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள பாகாயி, அதற்கும் அமெரிக்க அதிகாரிகளின் கத்தார் பயணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.


