• Login
Tuesday, June 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவிற்கு இந்திய ராணுவம் மருத்துவ உதவி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 30, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவிற்கு இந்திய ராணுவம் மருத்துவ உதவி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு, ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ திட்டத்தின் கீழ் இந்தியா அனுப்பியுள்ள இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனை முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெனிசுலாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது: அனுபவம் வாய்ந்த இந்திய மருத்துவர்கள் அடங்கிய குழு, கராகஸில் உள்ள இன்டர்நேஷனல் லா ரின்கோனாடா ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் மருத்துவ முகாமை அமைத்துள்ளது. இந்த மருத்துவமனை தற்போது 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவ சேவைகளும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,450 பேர் பலி

வெனிசுலாவில் கடந்த வாரம் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இந்த பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,450 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், பலர் மாயமாகியுள்ளனர்.

இந்திய ராணுவம்

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த வெனிசுலாவிற்கு பல்வேறு நாடுகளும் உதவி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும் நிவாரண உதவிக்ளை செய்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: , நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனை மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இந்திய ராணுவ மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். வெனிசுலா துணை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தலைநகர் மாவட்ட அரசின் தலைவர் ஆகியோர் இந்திய ராணுவ கள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.

வெளியுறவுத்துறை

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று வெளியிட்ட பதிவில், இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கள மருத்துவமனை வெனிசுலாவை சென்றடைந்துள்ளதாகவும், அந்நாட்டின் நிலநடுக்க நிவாரணப் பணிகளுக்கு அவை பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். இந்தியாவின் மனிதாபிமான உதவித் திட்டமான ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம், இந்திய விமானப்படையின் இரண்டு சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் 66 டன் நிவாரணப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு சென்றன. இதில், இந்திய ராணுவ கள மருத்துவமனை, 35 டன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.

டெல்லியில் இருந்து கராகஸ் வரை 14 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை சுமார் 23 மணி நேரத்தில் இந்த விமானங்கள் கடந்து சென்றதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் வெனிசுலா அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா உறுதுணையாக நிற்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Previous articleஉலகக் கிண்ணக் காற்பந்து சூதாட்டம்; 4 பேரின் தடுப்புக் காவல் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது!
tamiltamil



Read More

Previous Post

1,500+ மரணங்கள்… 50,000+ பேரை காணவில்லை… இயற்கையின் கோரதாண்டவத்தால் நிலைகுலைந்து போன வெனிசுலா!

Next Post

நாளை முதல் பேருந்துக் கட்டணத் திருத்தம்..! தொடரும் அழுத்தம்

Next Post
நாளை முதல் பேருந்துக் கட்டணத் திருத்தம்..! தொடரும் அழுத்தம்

நாளை முதல் பேருந்துக் கட்டணத் திருத்தம்..! தொடரும் அழுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin