உங்ககிட்ட ஸ்கில் இருக்கு ஆனா டிகிரி இல்லையா! அப்போ உங்களுக்கு தான் IT வேலை! நிறுவனங்களின் தற்போதைய ட்ரெண்ட்!
நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களும் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகின்றன. கம்ப்யூட்டரே கம்ப்யூட்டர் வேலைகளை எல்லாம் பார்த்துக் கொள்வதால் மனிதத் தலையீடு குறையத் தொடங்கியுள்ளது. முன்பெல்லாம் ஏதேனும் ஒரு கல்லூரியில் படித்து டிகிரி சான்றிதழும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழையும் மட்டுமே நம்பி பணியமர்த்திய நிறுவனங்கள் இன்று முற்றிலும் மாறுபட்ட வழியில் ஊழியர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
டிகிரியை விட திறமைக்கே முன்னுரிமை: இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் தற்போது டிகிரியை பார்ப்பதை நிறுத்தி வருகின்றன. மாணவர்களை தேர்ந்தெடுக்கும் போது அவர்களிடம் முறையான ஸ்கில் செட் இருக்கிறதா? பணியமர்த்தப்படும் நிறுவனம் என்ன செய்கிறது என்பது குறித்த பரீட்சையம் இருக்கிறதா? என்பதைத் தான் முதலில் பார்க்கின்றன. பட்டப்படிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படையான அறிவை வழங்குகிறது என்பது உண்மைதான். ஆனால் ஒரு ஊழியருக்கு உண்மையிலேயே திறமை தான் முக்கியம் என்பதை இன்றைய பணி அமர்த்தும் செயல்முறை நமக்கு உணர்த்துகிறது.
அதிலும் சில நிறுவனங்கள் வெளிப்படையாக டிகிரி தேவையில்லை உங்களுக்கு கோடிங் தெரிந்தால் போதும்.. உங்களிடம் நாங்கள் எதிர்பார்க்கும் ஸ்கில்செட் இருந்தால் போதும் என்று ஓப்பனாக கூறுகின்றன. எனவே இனிவரும் காலங்களில் இளம் வயதில் இருந்தே டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார் போல் திறன்களை வளர்த்தே ஆக வேண்டிய நிலையில் தான் இன்றைய இளம் பட்டதாரிகள் உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இதற்கு முன்பிருந்த படித்த பட்டதாரிகளே கேள்விப்படாத முக்கியமான திறன்கள் உருவாகியுள்ளன. ஒன்று ஏஐ சார்ந்த திறமை இருக்கிறதா என்று நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. மற்றொன்று எந்த நெருக்கடியான சூழல் வந்தாலும் அதை திறமையாக கையாளும் பண்பு. இப்படி நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் இருந்தால்தான் IT நிறுவனங்களில் ஒரு வேலையையே பெற முடிகிறது.
முன்பெல்லாம் ஐடி சார்ந்த டிகிரி முடித்து விட்டால் லைப் செட்டில் என்று நினைத்து வந்த இளைய தலைமுறையினருக்கு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் பிரச்சனையாய் மாறியிருக்கிறது. ஒருபுறம் அது வேலை வாய்ப்புகளை அதிகரித்தாலும் மறுபுறம் ஒரு சில தினசரி அடிப்படையில் செய்யக்கூடிய வேலைவாய்ப்புகளை குறைத்து வருகிறது என்பதே நிதர்சன உண்மை.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. உலகளவில் AI வேலை வாய்ப்புகளில் 20.5 சதவீத நபர்கள் இந்தியாவில் பணியமர்த்தப்படுகின்றனர். 280% ஏஐ ட்ரைனர் பணிகள் உலகளவில் இருந்து வருகிறது. ஆனால் அதற்கும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன் தேவைப்படுகிறது. AI தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வேலை வாய்ப்புகள் குறைகிறதோ? அதேபோல வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் செய்கின்றன. ஆனால் அதற்கு ஏற்ற திறன் பற்றாக்குறை ஊழியர்கள் மத்தியில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனவே மாணவர்களும் இது போன்ற புதிய திறன்களை தொடர்ந்து கற்றுக் கொண்டால் IT நிறுவனங்கள் அவர்களை அதிக சம்பளத்தில் பணியமர்த்தும் என்பதில் ஐயமில்லை.
