• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஈழத்துத் திரையுலகில் புதிய மைல்கல் ‘கூத்தாடி’

GenevaTimes by GenevaTimes
June 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஈழத்துத் திரையுலகில் புதிய மைல்கல் ‘கூத்தாடி’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி’ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாகத் தனது இரண்டாவது வாரத்தில் கால்பதித்துள்ளது.


இயக்குநர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில், ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில், பிரதாப் கண்ணன் உள்ளிட்ட இலங்கை, இந்தியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்கள் இணைந்து தங்களது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கை தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் (NFC) வெளியீடாகக் கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம், தற்போது நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.


சர்வதேச கலைஞர்களின் பங்களிப்போடு, ஈழத்து சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ள ‘கூத்தாடி’ திரைப்படத்திற்கு, சினிமா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாகவும், இளைஞர்களும் திரளாக வருகை தந்து படத்தை ரசித்து வருகின்றனர்.


படம் பார்த்த ரசிகர்கள் தங்களது உற்சாகமான கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து வருகின்றனர். “படம் மிகவும் நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது; கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு கலைஞர்களைத் தேர்வு செய்து, அவர்கள் கச்சிதமாக நடித்துள்ளனர். இது ‘வேற லெவல்’ தரத்தில் உருவாகியுள்ளது” என ரசிகர்கள் பாராட்டுக்களை அள்ளி வீசுகின்றனர். குறிப்பாக, நவீன சினிமா காலத்தில் நமது பாரம்பரியக் கூத்துக் கலை, இதிகாசங்கள் மற்றும் கிராமியப் பின்னணியைத் தற்கால இளைஞர்களிடம் மிக அற்புதமாகக் கொண்டு சேர்த்துள்ளதாக மூத்த கலைஞர்கள் இயக்குநருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


ஈழத்து சினிமாவின் வளர்ச்சிக்கு மைல்கல்லாக அமைந்துள்ள இத்திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்த்து ஆதரவளிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து, படக்குழுவினர் மேலும் பல பிரம்மாண்டமான படைப்புகளைத் தந்து மென்மேலும் உயர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.


 



Read More

Previous Post

ரோஹிங்யா தொண்டு நிறுவனங்களின் மன்னிப்புக்கு ‘மகர்’ அமைப்பு வரவேற்பு! | Makkal Osai

Next Post

அயோத்தி உண்டியல் திருட்டு எதிரொலி.. 50% குறைந்த பக்தர்கள் கூட்டம்! யோகி அரசு மீது பக்தர்கள் கோபம் | Ayodhya Ram Mandir Donation Scam: Footfall Drops by 50% Amid SIT Interim Report on 70 Theft Incident

Next Post
அயோத்தி உண்டியல் திருட்டு எதிரொலி.. 50% குறைந்த பக்தர்கள் கூட்டம்! யோகி அரசு மீது பக்தர்கள் கோபம் | Ayodhya Ram Mandir Donation Scam: Footfall Drops by 50% Amid SIT Interim Report on 70 Theft Incident

அயோத்தி உண்டியல் திருட்டு எதிரொலி.. 50% குறைந்த பக்தர்கள் கூட்டம்! யோகி அரசு மீது பக்தர்கள் கோபம் | Ayodhya Ram Mandir Donation Scam: Footfall Drops by 50% Amid SIT Interim Report on 70 Theft Incident

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin