• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தரைதட்டிய ஸ்விக்கி, சோமேட்டோ பங்குகள்.. 47% வரை சரிவு.. இனி தான் அமேசான், வால்மார்ட் ஆட்டம் ஆரம்பம்..! | Swiggy & Zomato Stocks Crash Up to 47% as Amazon and Flipkart Intensify Quick Commerce War

GenevaTimes by GenevaTimes
June 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தரைதட்டிய ஸ்விக்கி, சோமேட்டோ பங்குகள்.. 47% வரை சரிவு.. இனி தான் அமேசான், வால்மார்ட் ஆட்டம் ஆரம்பம்..! | Swiggy & Zomato Stocks Crash Up to 47% as Amazon and Flipkart Intensify Quick Commerce War
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தரைதட்டிய ஸ்விக்கி, சோமேட்டோ பங்குகள்.. 47% வரை சரிவு.. இனி தான் அமேசான், வால்மார்ட் ஆட்டம் ஆரம்பம்..!

இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் வர்த்தகம் என்றால் அது குவிக் காமர்ஸ் தான், ஒரு காலத்தில் ஈகாமர்ஸ், புட் டெலிவரி போல் தற்போது குவிக் காமர்ஸ் மிகப்பெரிய வர்த்தக தளமாக மாறியுள்ளது.

இத்துறையில் ஏற்கனவே பெரிய தலையாக செப்டோ, பிளிங்கிட், ஸ்விக்கி இருந்தாலும் புதிதாகவும், பெரும் முதலீட்டு உடனும் அமெரிக்க நிறுவனங்களாகன அமேசான், வால்மார்ட் வர உள்ளது. இதனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள ஸ்விக்கி, சோமேட்டோ பங்குகள் பெரும் சரிவை பதிவு செய்து வருகிறது.

தரைதட்டிய ஸ்விக்கி, சோமேட்டோ பங்குகள்.. 47% வரை சரிவு.. இனி தான் அமேசான், வால்மார்ட் ஆட்டம் ஆரம்பம்..!

10 நிமிட டெலிவரி சந்தை

இந்தியாவின் 10 நிமிட டெலிவரி சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான போட்டியை சந்தித்து வருகிறது. இதுவரை இந்த சந்தையில் முன்னிலை வகித்து வந்த பிளிங்கிட் மற்றும் இன்ஸ்டாமார்ட் நிறுவனங்களுக்கு தற்போது அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நேரடி சவால் விடுத்துள்ளன. குறிப்பாக, பெருநகரங்களைத் தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் சேவையை விரிவுபடுத்தும் திட்டம் இந்த போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுமார் 11 பில்லியன் டாலர் மதிப்புடைய குவிக் காமர்ஸ் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. மளிகைப் பொருட்கள் மட்டுமல்லாமல், மின்னணு சாதனங்கள், தனிநபர் பராமரிப்பு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட காஸ்ட்லியான பொருட்கள் பிரிவுகளிலும் பொருட்களை வேகமாக டெலிவரி செய்யப்படுவதால்.. அனைத்து தரப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த மாற்றமே முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களையும் தங்கள் முதலீடுகளை அதிகரிக்க தூண்டியுள்ளது.

அமேசான்

கடந்த ஆண்டு அறிமுகமான Amazon Now சேவை தற்போது 15 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இதை அடுத்த கட்டமாக 300-க்கும் அதிகமான நகரங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு விரிவுபடுத்த அமேசான் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கட்டமைப்பை வலுப்படுத்தும் முதலீடுகளுடன், குவிக் காமர்ஸ் டெலிவரி வலையமைப்பையும் விரிவுபடுத்த அமேசான் முடிவு செய்துள்ளது.

ஃபிளிப்கார்ட்

மறுபுறம், Flipkart Minutes இரண்டு ஆண்டுகளுக்குள் 1,000 டார்க் ஸ்டோர்களை உருவாக்கி 130 நகரங்களில் சேவையை விரிவுபடுத்தியுள்ளது. அடுத்த சில மாதங்களில் மேலும் 500 டார்க் ஸ்டோர்களை அமைத்து, 180-க்கும் மேற்பட்ட நகரங்களில் சேவையை வழங்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது. குறிப்பாக சிறு நகரங்களில் வாடிக்கையாளர் தேவை வேகமாக உயர்ந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வர்த்தக போட்டி உச்சம்

அமேசான், பிளிப்கார்ட்-ன் தீவிமான விரிவாக்கம் முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளிங்கிட் நிறுவனத்தை இயக்கும் Eternal நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த அக்டோபர் மாத உச்ச நிலையிலிருந்து சுமார் 28 சதவீதம் சரிந்துள்ளது.

அதேபோல், இன்ஸ்டாமார்ட்டை இயக்கும் ஸ்விக்கியின் பங்கு விலை, செப்டம்பர் மாத உச்ச நிலையிலிருந்து சுமார் 47 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இதன் மூலம் இரு நிறுவனங்களின் சந்தை மதிப்பில் மொத்தமாக 1.4 லட்சம் கோடி குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.

மார்ச் 31 நிலவரப்படி பிளிங்கிட் 2,243 டார்க் ஸ்டோர்களையும், இன்ஸ்டாமார்ட் 1,143 டார்க் ஸ்டோர்களையும் இயக்கி வருகிறது. இருப்பினும், அதிக முதலீட்டு திறன் கொண்ட அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் சிறு நகரங்களிலும் வேகமாக கால்பதித்து வருவதால், சந்தையில் ஆதிக்க நிலையும், வர்த்தக முறையும் மாறுப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டோ மறந்துவிடக்கூடாது..

இந்த போட்டியில் செப்டோ தான் முக்கியமான பேசுபொருளாக உள்ளது. குவிக் காமர்ஸ் துறை வர்த்தகத்தில் முதல் முதலில் பெரிய அளவில் நுழைந்தது செப்டோ தான். இந்நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான IPO வெளியிட திட்டமிட்டுள்ளது. அந்த நிதியை பயன்படுத்தி செப்டோ பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது.

சந்தையில் தற்போது கடும் போட்டி நிலவுவதால், குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் லாபத்தை குறைத்து வர்த்தகத்தை தான் அதிகரிக்க திட்டமிடுவார்கள். இதனால் காலாண்டு முடிவுகளில் லாபம் அளவீடுகள் குறைய வாய்ப்புள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மிகவும் உஷாராக செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

Share This Article

English summary

Swiggy & Zomato Stocks Crash Up to 47% as Amazon and Flipkart Intensify Quick Commerce War

Swiggy and Zomato (Eternal) stocks have plunged sharply, with combined losses exceeding $15 billion, as Amazon and Flipkart aggressively expand their quick commerce operations across India. The entry of these e-commerce giants into the 10-minute delivery segment is intensifying competition and pressuring profitability of existing players.

Story first published: Monday, June 29, 2026, 14:18 [IST]

Other articles published on Jun 29, 2026

Read More

Previous Post

சீனாவுக்கு செக் வைக்கும் தீவில் வாழும் தமிழர்கள்.. மோடியின் நவசக்தி விநாயகர் விசிட்.. பின்னணி! | Tamils in Seychelles, Wher PM Modi Conferred with award and Prays at Navasakti Vinayagar Temple

Next Post

US vs IRAN : அமெரிக்காவுடன் போர்… ஆனால் பஹ்ரைன் மீது தாக்குதல்! ஈரானின் மாஸ்டர் பிளான் என்ன?

Next Post
US vs IRAN : அமெரிக்காவுடன் போர்… ஆனால் பஹ்ரைன் மீது தாக்குதல்! ஈரானின் மாஸ்டர் பிளான் என்ன?

US vs IRAN : அமெரிக்காவுடன் போர்... ஆனால் பஹ்ரைன் மீது தாக்குதல்! ஈரானின் மாஸ்டர் பிளான் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin