நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரில், சண்டைகளைக் கட்டுப்படுத்துவதற்காக உக்ரைன் முன்வைத்த புதிய அமைதித் திட்டத்தை ரஷ்யா நிராகரித்துள்ளது.
உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை முழுமையாகக் கைப்பற்றும் தனது போர்க்கள இலக்கைத் தொடரப் போவதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய புடின், முக்கியமாக ரஷ்யாவின் எண்ணெய் தொழிலை இலக்காகக் கொண்டு தீவிரமடைந்துள்ள உக்ரைனிய ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள, ரஷ்யா தனது வான் பாதுகாப்புத் திறனை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உக்ரைனிய படைகளுக்கு அழுத்தம்
இந்தத் தாக்குதல்கள் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதை ஒப்புக்கொண்ட அவர், விநியோகப் பிரச்சினைகளை ரஷ்யா சிறப்பாகச் சமாளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொருபின்னணியில், அமைதிக்கான ஒரு படியாக, இரு நாடுகளும் நீண்ட தூரத் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ளலாம் என்று உக்ரைன் முன்மொழிந்ததாக புடின் தெரிவித்துள்ளார்.
எனினும், போர்முனையில் உக்ரைனிய படைகள் சந்தித்து வரும் கடுமையான அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே அந்நாடு இந்த உத்தியைக் கையாள்கிறது என ரஷ்யா கருதுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

