Last Updated:
இதில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், போதைப்பொருள் பயன்பாடு தனிநபரின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், கல்வி, உற்பத்தித்திறன், சமூக ஒற்றுமை, தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார்.
போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான போராட்டம் தனிநபர்களிடமிருந்து தொடங்கி நாடு தழுவிய இயக்கமாக வளர வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். போதை இல்லாத இந்தியா என்ற இலக்கைக் கட்டமைக்க கல்வி நிறுவனங்கள், குடும்பங்கள், சுகாதாரப் பணியாளர்கள், சட்ட அமலாக்க முகமைகள், குடிமைச் சமூகம் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில், ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 31-வது நிறுவன நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அப்பல்கலைக்கழகம், ‘போதைப்பொருள் இல்லாத பாரதம் தொடர்பான மாநாட்டை இன்று (28.06.2026) நடத்தியது. இதில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், போதைப்பொருள் பயன்பாடு தனிநபரின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், கல்வி, உற்பத்தித்திறன், சமூக ஒற்றுமை, தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கர்நாடகாவில் நடைபெறும் தேசிய போலியோ ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, குடியரசுத் துணைத் தலைவர் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி சொட்டு மருந்தை வழங்கினார். மேலும், பல ஆண்டுகளாக ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், அதன் முன்னாள் துணைவேந்தர்களை அவர் கௌரவித்தார்.
Jun 28, 2026 10:37 PM IST


