• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ‘கிளீன் ஸ்ரீலங்காவும் விசித்திர வைத்தியரும்’

GenevaTimes by GenevaTimes
June 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ‘கிளீன் ஸ்ரீலங்காவும் விசித்திர வைத்தியரும்’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




ஒரு பிராந்திய வைத்தியசாலையில் அண்மையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம், அங்குள்ள ஊழியர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறியுள்ளது.


அவ்வைத்தியசாலையில் நீண்ட காலமாகப் பணியாற்றும் வைத்தியர் ஒருவர், சுத்தத்தின் மீது அதீத அக்கறை கொண்டவர். சக ஊழியர்களுடன் மிகவும் சுமுகமாகப் பழகும் அவர், அவ்வப்போது குறும்புத்தனமான வேலைகளிலும் ஈடுபடுவது வழக்கம்.


வழமை போலவே, அன்றைய தினம் வைத்தியசாலையின் வெளிநோயாளிப் பிரிவில் (OPD) ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தரையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வெளியில் உள்ள குழாயில் (Tap) இருந்து குழாய் மூலம் தண்ணீரை உள்ளே செலுத்தி, தரையைத் துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு, குழாயை மூடிவிட்டுச் சென்றனர். ஆனால், சிறிது நேரத்திலேயே தரை மீண்டும் தண்ணீர் நிரம்பி வழிவதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


மீண்டும் ஒருமுறை தண்ணீரைத் துடைத்துவிட்டு குழாயை இறுக்கமாக மூடினர். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் தரை முழுவதும் தண்ணீர்! “என்ன இது? எத்தனை முறை துடைத்தாலும் தரை நனைந்து கொண்டே இருக்கிறதே!” என்று ஊழியர்கள் குழப்பமடைந்தனர். ஒரு கட்டத்தில், “இன்று என்ன சாபம்? ஓ.பி.டி-யை கழுவி கழுவி ஓயவே இல்லையே!” என்று அவர்கள் சலித்துக் கொண்டனர்.


எதனால் தண்ணீர் வருகிறது என்று குழப்பமடைந்த ஊழியர் ஒருவர், ஜன்னல் வழியாக வெளியே உற்று நோக்கினார். அப்போது, அங்கே ஒரு விசித்திரமான காட்சி அரங்கேறியது. அங்கே வந்த அந்த வைத்தியர், யாருக்கும் தெரியாமல் வலம் வந்து, அந்தத் தண்ணீர் குழாயைத் திறந்துவிட்டுவிட்டு, மெதுவாகச் சிரித்துக் கொண்டே அங்கிருந்து செல்வதைக் கண்டு அந்த ஊழியர் திகைத்தார்.


உடனே சக ஊழியர்களிடம் ஓடிச் சென்று, “எல்லாம் அந்த வைத்தியரின் வேலைதான்!” என்று கூறி நடந்ததைக் கூறினார். ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்த வைத்தியரிடம் சென்று, “சார், நீங்கதான் குழாயைத் திறந்து விடுறீங்கனு கண்டுபிடிச்சிட்டோம். நாங்க ஏற்கனவே ஏழு தடவை தரையைத் துடைச்சு அலசிட்டோம்!” என்று கூறினர்.


அதற்கு அந்த வைத்தியர், கொஞ்சமும் அசராமல், “நம்ம ஊருல ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டம் ரொம்பத் தீவிரமா நடக்கணுமே! அதனால்தான் ஓ.பி.டி-யை இத்தனை தடவை கழுவி சுத்தம் செய்ய முடிவு பண்ணேன்!” என்று கூலாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.


இந்த பதிலைக் கேட்டு வாயடைத்துப் போன ஊழியர்கள், சிரிப்பை அடக்க முடியாமல், “நிஜமாவே நீங்க அப்புடிப்பட்ட விசித்திரமான டாக்டர் தான் சார்!” என்று கூறிச் சிரித்தபடியே பணியைத் தொடர்ந்தனர். அம்பாறை பகுதியில் உள்ள ஒரு பிராந்திய வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


 



Read More

Previous Post

விமர்சனங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு புவாடிடம் ஜாஹிட் கூறுகிறார்

Next Post

திமுகவினருக்கு விஜய் குறி? 100 கோடி பள்ளி முறைகேடு வழக்கில் அரசகுமார் கைது.. அடுத்து சிக்கும் தலைகள் | DMK Leaders in Trouble? Vijay Plans Major Crackdown as DMK leaders on their scam

Next Post
திமுகவினருக்கு விஜய் குறி? 100 கோடி பள்ளி முறைகேடு வழக்கில் அரசகுமார் கைது.. அடுத்து சிக்கும் தலைகள் | DMK Leaders in Trouble? Vijay Plans Major Crackdown as DMK leaders on their scam

திமுகவினருக்கு விஜய் குறி? 100 கோடி பள்ளி முறைகேடு வழக்கில் அரசகுமார் கைது.. அடுத்து சிக்கும் தலைகள் | DMK Leaders in Trouble? Vijay Plans Major Crackdown as DMK leaders on their scam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin