மேற்கு ஐரோப்பாவில் பாதிப்புகளை ஏற்படுத்திய வெப்ப அலை கிழக்கு நோக்கிப் பரவியதால், வெப்பநிலை 40C (104F) ஐத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் குறிப்பாக ஜெர்மனியும் இத்தாலியும் கடும் புழுக்கத்தை எதிர்கொண்டனதாக தெரிவிக்கப்படுகிறது.
வானிலை ஆய்வு நிறுவன அறிக்கைகளின்படி, சனிக்கிழமையன்று டென்மார்க் வரலாற்றிலேயே மிக உயர்ந்த வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக வெப்பநிலை தாக்கம்
இதுவே வரலாற்றில் பதிவான அதிக வெப்பநிலை தாக்கமாகும். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வெப்பநிலை 26.3C-க்குக் கீழே குறையாத நிலையில், வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான இரவாகப் பதிவானதாக ஸ்லோவாக்கியா அரச தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பிரித்தானியா , பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜூன் மாதத்தில் வரலாறு காணாத வெப்பத்தை அனுபவித்துள்ளன.
மேலும் இந்த வானிலை அமைப்பு போலந்தை நோக்கி நகரும்போது மேலும் பாதிப்புக்கள் அதிகரிக்களாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
The heatwave that has subjected western Europe to punishing temperatures and broken numerous records this week will start moving east over the weekend, Clare Nullis, spokesperson for the World Meteorological Organization, said pic.twitter.com/BKrvSMJADE
— Reuters (@Reuters) June 26, 2026
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

