இந்த நெருக்கடி காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 70 டாலரிலிருந்து 120 டாலராகவும், எல்பிஜி இறக்குமதி செலவு 46 சதவீதமும் உயர்ந்து. இதன் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டரின் இறக்குமதி மதிப்பு ரூ.1,600-ஐத் தாண்டியது. எவ்வாறாயினும், ஜூன் மாத மத்தியில் அமெரிக்கா-ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு இயல்பு நிலை திரும்பிய போது, பெரிய பொருளாதார நாடுகளில் மிகக் குறைந்த அளவிலான விலைவாசி பாதிப்பைச் சந்தித்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் இந்த சவாலை சமாளிக்க முக்கியக் காரணமாக அமைந்தது. 2014 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி முனையங்கள் 11-லிருந்து 22 ஆகவும், குழாய் வழித்தடங்கள் 2,311 கிலோமீட்டரிலிருந்து 6,242 கிலோமீட்டராகவும் அதிகரிக்கப்பட்டன. அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் நாடுகளின் எண்ணிக்கை 27-லிருந்து 41 ஆக விரிவுபடுத்தப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோலிய பொருட்களை நம்பியிருப்பதை குறைத்தல், கச்சா எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் அந்நியசெலாவணியை சேமித்தல், காற்று மாசினைக் குறைத்தல், ஆகியவற்றுக்காக 20 சதவீத அளவுக்கும் பெட்ரோலுடன் எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது, கச்சா எண்ணெய் இறக்குமதித் தேவையைக் கணிசமாகக் குறைத்தன. இந்திய பெட்ரோலிய பொருட்கள் சேமிப்பு நிறுவனம் மூலம் 5.33 மில்லியன் மெட்ரிக் டன்கள் சேமிப்பு திறனுள்ள சேமிப்புக் கிடங்குகளை விசாகப்பட்டினம், மங்களூரு மற்றும் பாதூரில் வைத்துள்ளன. இங்கு 3 வாரங்களுக்கு நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு வைக்க முடியும். மேற்காசியா நெருக்கடியின் போது, இந்த சேமிப்புக் கிடங்குகள் அரசுக்கு கைகொடுத்தன.
மேற்காசிய போர் சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உலக அளவில் ஏற்றம் கண்டது. இந்த சுமையை மக்கள் மீது ஏற்றாமல் இருக்க, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை ரூ 10 குறைக்கும் குறிப்பிடத்தக்க முடிவை மத்திய அரசு கடந்த மார்ச் 27ம் தேதியன்று எடுத்தது. இதன் காரணமாக, மத்திய அரசுக்கு ரூ. 1.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. மேலும், கடந்த 2 மாதங்களாக அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் நாளொன்றுக்கு சுமார் ரூ.1,000 கோடி நஷ்டத்தை ஏற்றுக்கொண்டன. இறுதியாக, மே 15 அன்று தவிர்க்க முடியாத சூழல் காரணமாக பெட்ரோல்/டீசல் லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தப்பட்டது. மேற்காசிய நெருக்கடி காலகட்டங்களில் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.7 மட்டுமே அதிகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்பிஜி சிலிண்டர்களின் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைப்படுத்தலைத் தடுக்க தீவிர நடவடிகளை மத்திய/மாநில அரசுகள் மேற்கொண்டன. பிஎன்ஜி-வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி சிலிண்டரை திருப்ப ஒப்படைக்க ஊக்குவிக்கபபட்டனர் . மேற்கு ஆசியப் பதற்றங்களுக்கு மத்தியிலும், நாட்டின் தினசரி LPG உற்பத்தி 35,000-லிருந்து 54,000 டன்னாக உயர்ந்தது. தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல், எல்பிஜி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.942 ஆக கட்டுப்படுத்தப்பட்டது. 10.58 கோடி உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு ரூ.300 நேரடி மானியம் வழங்கப்பட்டு, தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த விலையாக ரூ.642-க்கு எரிவாயுசிலிண்டர் விநியோகிக்கப்பட்டது. இதற்காக, எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடியை இழப்பீடாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஒரு சிலிண்டருக்கு ஆகும் பல நூறு ரூபாய் செலவை அரசு ஏற்றுக்கொள்வதால், அதன் பெரும் சுமை குடும்பங்கள் மீது விழுவதில்லை. கடுமையான சர்வதேச விலை உயர்வுக் காலத்தில், அந்தச் சுமை நுகர்வோர் மீது சுமத்தப்படாமல், மூல உற்பத்தியாளர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த சிக்கல்களின்போதும் தடையற்ற விநியோகத்திற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச விலைகளில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், மத்திய அரசு பல ஆண்டுகளாக இந்தியக் மக்களுக்கு உலகின் மிகக் குறைந்த விலையில் சமையல் எரிவாயு வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது.
மேற்காசியா நெருக்கடி காரணமாக அண்டை நாடான இலங்கை தீவிர எரிபொருள் கட்டுப்பாடுகளை விதித்தது. பாகிஸ்தான் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்தது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் எரிபொருள் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. ஆனால், இந்தியாவில் கல்வி நிறுவனங்களோ, வாகனப் போக்குவரத்தோ எவ்விதத் தடையுமின்றி சீராக இயங்கின. குறிப்பாக, வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற முன்னுரிமைத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
எனவே, மேற்காசிய மோதல் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் குறுகிய கால இழப்புகளைச் சந்தித்தாலும், இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 728 பில்லியன் டாலர்களாக அதிகரிரித்துள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார (GDP) வளர்ச்சியும் 7.6 சதவீதமாக வளர்ச்சியியடைந்துள்ளது. நாட்டின் நீண்டகால எரிசக்தித் திட்டமிடலும், மக்கள் நலன் சார்ந்த கொள்கை முடிவுகளும் இந்த வரலாற்று வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

