சீனாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் மத்திய வணிகப் பகுதியில் அமைந்துள்ள 528 மீட்டர் உயரமுள்ள சிடிக் டவர் (CITIC Tower / China Zun) வானளாவிய கட்டிடத்தின் மேல் பகுதியில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (26-06-2026) இடம்பெற்றுள்ளது.
வெளிப்புறக் கண்ணாடிகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்ட Sunward SA 60L Aurora (பதிவு எண்: B-12PP) என்ற இலகுரக விளையாட்டு விமானமாகும்.

இது Shuangyue General Aviation என்ற பயிற்சி நிறுவனத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டிடத்தின் வெளிப்புறக் கண்ணாடிகள் சேதமடைந்து இடிபாடுகள் கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உத்தியோகபூர்வ அறிக்கை
இருப்பினும், விமானத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
வான்வெளி கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பெய்ஜிங்கின் மையப்பகுதிக்குள் இந்த விமானம் எவ்வாறு நுழைந்தது என்பது குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன.

இது முறையான அனுமதி பெற்றுப் பறந்ததா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சீன அதிகாரிகள் இதுவரை இது குறித்து எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

