• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.55-க்கு ரூ.3,000 பென்ஷன் கிடைக்கும்! நம்ம ஊர் விவசாயி, டைலர், டிரைவர், பிளம்பர்களுக்கு அரசே தரும் ஆஃபர்! | PM Shram Yogi Maandhan Yojana: Get Rs.3,000 Monthly Pension from Age 60 with just Rs.55

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.55-க்கு ரூ.3,000 பென்ஷன் கிடைக்கும்! நம்ம ஊர் விவசாயி, டைலர், டிரைவர், பிளம்பர்களுக்கு அரசே தரும் ஆஃபர்! | PM Shram Yogi Maandhan Yojana: Get Rs.3,000 Monthly Pension from Age 60 with just Rs.55
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.55-க்கு ரூ.3,000 பென்ஷன் கிடைக்கும்! நம்ம ஊர் விவசாயி, டைலர், டிரைவர், பிளம்பர்களுக்கு அரசே தரும் ஆஃபர்!

அரசு வேலையில் பணிபுரிந்தவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் அடல் பென்ஷன் யோஜனா, PF மற்றும் இதர பென்ஷன் திட்டங்களில் மூலம் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர். ஆனால் இன்றளவும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் வயதான காலத்தில் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களிடம் கையேந்தாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

அப்படி இருக்கையில் வெயிலிலும் மழையிலும் கடுமையாக உழைத்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றும் விவசாயிகள், தினக்கூலி வேலை செய்பவர்களுக்கு முறையான பென்ஷன் திட்டங்கள் இல்லாமல் இருந்தது. இதைத் தெரிந்து கொண்டு மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கென்று “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் (PM-SYM)” என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களும் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம்.

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் (PM-SYM) என்றால் என்ன?: PM-SYM என்பது EPF திடத்தைப் போலவே செயல்படும் பென்ஷன் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களுடைய விருப்பத்தின் பேரில் சேர்ந்து கொள்ளலாம். PM-SYM திட்டத்தின் கீழ் இணையும் பயனாளிகள் 60 வயதைக் கடந்த பிறகு மாதம் ரூ.3,000 என்ற குறைந்தபட்ச ஓய்வூதியத்தை பெற முடியும்.

ரூ.55-க்கு ரூ.3,000 பென்ஷன் கிடைக்கும்! நம்ம ஊர் விவசாயி, டைலர், டிரைவர், பிளம்பர்களுக்கு அரசே தரும் ஆஃபர்!

எப்படி பிஎஃப் திட்டத்திற்கு ஊழியர் மற்றும் அவருடைய நிறுவனத்தின் சார்பில் பங்களிப்பு செய்யப்படுகிறதோ.. அதேபோல நீங்கள் எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறீர்களோ அதே அளவிலான தொகையை மத்திய அரசும் உங்கள் கணக்கில் செலுத்தி வரும். வயதை பொறுத்து PM-SYM திட்டத்தில் பங்களிப்பு செய்ய வேண்டும். உதாரணமாக 18 வயதில் ஒருவர் இணைகிறார் என்றால்.. அவர் மாதா மாதம் 55 ரூபாய் செலுத்த வேண்டும். அதே அளவு தொகையை மத்திய அரசும் அவர்களுடைய கணக்கில் செலுத்தும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?: இந்த திட்டத்தில் இணைய மாத வருமானம் ரூ.15,000-த்திற்கு கீழ் இருக்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள், சிறு குறு விவசாயிகள், தெருவோர வியாபாரிகள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், பிளம்பர்கள், டைலர்கள், காலணி தைப்பவர்கள், சலவை செய்பவர்கள், பீடி தொழிலாளர்கள், மதிய உணவு தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள், இதர தினக்கூலி மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். முன்பு கூறியதைப் போல் வயதை பொறுத்து ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும்.

வயது அடிப்படையில் எவ்வளவு பங்களிப்பு செய்ய வேண்டும்?:

18 வயது – ரூ. 55
19 வயது – ரூ. 58
20 வயது – ரூ. 61
21 வயது – ரூ. 64
22 வயது – ரூ. 68
23 வயது – ரூ. 72
24 வயது – ரூ. 76
25 வயது – ரூ. 80
26 வயது – ரூ. 85
27 வயது – ரூ. 90
28 வயது – ரூ. 95
29 வயது – ரூ. 100
30 வயது – ரூ. 105
31 வயது – ரூ. 110
32 வயது – ரூ. 120
33 வயது – ரூ. 130
34 வயது – ரூ. 140
35 வயது – ரூ. 150
36 வயது – ரூ. 160
37 வயது – ரூ. 170
38 வயது – ரூ. 180
39 வயது – ரூ. 190
40 வயது – ரூ. 200

ஒருவர் எவ்வளவு சீக்கிரமாக இந்த திட்டத்தில் இணைகிறாரோ அந்த அளவுக்கு குறைந்த தொகையை செலுத்தினால் போதுமானது. PM-SYM திட்டத்தில் இணையும் நபரின் பங்களிப்பைப் பொறுத்து அரசும் அதற்கு ஈடாக பங்களிப்புச் செய்யும்.

60 வயதிற்கு பிறகு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?: வயதை பொறுத்து தொடர்ந்து பங்களிப்பு செய்ய வேண்டும். அதன் பிறகு 60 வயதைக் கடந்து விட்டால் குறைந்தபட்சம் ரூ.3,000 என்ற மாதாந்திர ஓய்வூதியத்தை பெற முடியும். இந்த தொகை நேரடியாக விண்ணப்பதாரரின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படும்.

ஃபேமிலி பென்ஷன்: PM-SYM திட்டத்தின் முக்கிய அம்சம் என்ன தெரியுமா? இந்தத் திட்டத்தில் இணைந்த ஒருவர் 60 வயதை எட்டுவதற்கு முன்பே இறந்துவிட்டால் அவருடைய கணவனோ அல்லது மனைவியோ மீதமுள்ள காலத்திற்கு பங்களிப்பு செய்யலாம். 60 வயதை கடந்த பின்னர் இறந்த விண்ணப்பதாரரின் சார்பாக அவருடைய கணவனோ அல்லது மனைவியோ 50 சதவீதம் வரையிலான ஓய்வூதியத்தைப் பெற முடியும். ரூ.3000 எனில் மாதம் 1500 ரூபாய் பெறலாம்.

PM-SYM திட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேற முடியுமா?: சில நிபந்தனைகளின் கீழ் இந்த திட்டத்திலிருந்து பாதியில் விண்ணப்பதாரர் விலகலாம். பங்களிப்பு செய்ய தொடங்கியதில் இருந்து 10 வருடத்திற்குள் விலகி விட்டால் நீங்கள் எவ்வளவு தொகை செலுத்தி இருக்கிறீர்களோ அந்த தொகை சேவிங்ஸ் அக்கவுண்ட் வட்டி விகிதத்துடன் திருப்பித் தரப்படும். 10 வருடத்திற்கு பின் பங்களிப்பு தொடங்கி, 60 வயதிற்கு முன்னர் நீங்கள் விலகிக் கொண்டால் நீங்கள் செலுத்திய தொகை.. இந்த திட்டத்திற்கான வட்டி ஆகிய இரண்டும் சேர்த்து வழங்கப்படும். இடையில் எப்போதாவது ஓரிரு தவணையை நீங்கள் செலுத்த முடியாமல் போனால்.. அதற்கான சிறு வட்டி தொகையோடு மீண்டும் செலுத்தி கணக்கை தொடரலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?: ஏற்கனவே இபிஎப் திட்டத்தின் கீழ் பங்களிப்பு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பங்களிப்பு செய்பவர்கள் , வருமான வரி செலுத்துவோர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சேவிங்ஸ் அக்கவுண்ட், மொபைல் நம்பர், பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவை தேவைப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?: விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அருகில் இருக்கும் பொது சேவை மையங்களுக்கு செல்லலாம். விண்ணப்பம் முடிந்த பிறகு விண்ணப்பித்த பிறகு உங்களுக்கு ஷ்ரம் யோகி கார்டு வழங்கப்படும்

Share This Article

Story first published: Friday, June 26, 2026, 16:41 [IST]

Other articles published on Jun 26, 2026

Read More

Previous Post

IND vs IRE : முதல் டி20 மேட்ச்.. அயர்லாந்திடம் உலக சாம்பியன் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி.. 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது | கிரிக்கெட் செய்திகள்

Next Post

தேர்தல் நெருங்கும் வேளையில் 216.44 மில்லியன் ஒதுக்கீடு ஏன்? மூடா கேள்வி | Makkal Osai

Next Post
தேர்தல் நெருங்கும் வேளையில் 216.44 மில்லியன் ஒதுக்கீடு ஏன்? மூடா கேள்வி | Makkal Osai

தேர்தல் நெருங்கும் வேளையில் 216.44 மில்லியன் ஒதுக்கீடு ஏன்? மூடா கேள்வி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin