வெனிசுவெலாவில் ஏற்பட்ட இரண்டு பேரழிவுகரமான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியுள்ள மக்களை மீட்க்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் அவசரத் தேடுதல் பணியில் சர்வதேச மீட்புக் குழுக்கள் இணைந்துள்ளன என்றும் அவை கூறியுள்ளன.
பிரேசில், கனடா, மெக்சிகோ, கொலம்பியா, எல் சால்வடார், கியூபா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட அமெரிக்கா கண்டம் முழுவதிலுமிருந்து வரும் நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும், நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[6K0DRKN
]
தீவிர மீட்பு பணி
இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தங்களின் மதிப்பீட்டை அதிகாரிகள் 589 பேர் என தெரிவித்துள்ளனர். மேலும் 3000 பேர் தற்போது காயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கங்கள், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெனிசுலாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் அடங்கும்.
இந்நிலையில் 600 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவதுடன், மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மருத்துவமனைகளில் நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் வெனிசுலாவின் சுகாதார அமைச்சர் கார்லோஸ் அல்வராடோ தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

