மலேசிய இந்தியர்களின் முன்னணி அரசியல் தலைவரும், சமூக சேவையாளருமான மறைந்த துன் டாக்டர் வி.தி. சம்பந்தனின் 107-ஆவது பிறந்தநாள் நினைவு விழா வரும் ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை, பேராக் மாநிலம் சுங்கை சிப்புட்டிலுள்ள ஹீவுட் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கிறார்.மேலும், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத் தலைமை நிர்வாகி டத்தோ பி.சகாதேவன் கலந்துக்கொள்கிறார்.

மேலும்,இந்நிகழ்வில் மின்னல் எப்.எம். முன்னாள் மூத்த அறிவிப்பாளர் சங்கர், துன் சம்பந்தனின் தவப்புதல்வி தேவகுஞ்சரி சம்பந்தன், உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.துன் சம்பந்தன் சமூக நல மன்றம் ஏற்பாடு செய்யும் இந்நிகழ்வில் மறைந்த துன் டாக்டர் வீ.தி. சம்பந்தனின் அரசியல், சமூக , கல்விப் பணிகளை நினைவுகூரும் வகையில் நடைபெறும் இந்நிகழ்வில், பொதுமக்கள் , அவரது தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு தலைவர் சமூக ஆய்வாளர் கி.மணிமாறன் அழைப்பு விடுத்துள்ளனர்.
(எஸ்.லிங்கேஸ்வரன்)
The post துன் டாக்டர் வீ.தி. சம்பந்தனின் 107-ஆவது பிறந்தநாள் விழா appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

