இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சந்தையில் விற்பனை செய்யப்படும் வெண்டை, மிளகாய், கத்திரி, பூசணி, வெள்ளரி, புடலை, பாகற்காய், சுரைக்காய், பரங்கிக்காய் மற்றும் தக்காளி ஆகிய பயிர்களின் விதைகளைத் தர சோதனை செய்த பின் விற்பனை செய்வது அவசியமாகும்.


