• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தேசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கௌதமி சாதனை… ஆசிய போட்டிக்கும் தகுதி | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
தேசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கௌதமி சாதனை… ஆசிய போட்டிக்கும் தகுதி | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 26, 2026 12:44 PM IST

நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த கௌதமி, எளிமையான மற்றும் பொருளாதார ரீதியாகச் சவாலான பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தேசிய அளவிலான தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கௌதமி ஜெயராமன் தங்கப் பதக்கம் வென்றதுடன், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கும் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

65 ஆவது தேசிய மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் தமிழகம் சார்பில் பங்கேற்ற கௌதமி ஜெயராமன், தொடக்கம் முதலே சக வீராங்கனைகளுக்குக் கடுமையான சவால்களை அளித்து அசுர வேகத்தில் இலக்கை நோக்கிப் பாய்ந்து சென்று வெறும் 2.04 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம், ஜப்பான் நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கும் தேர்வாகி தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடி தந்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த கௌதமி, எளிமையான மற்றும் பொருளாதார ரீதியாகச் சவாலான பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். நிதி நெருக்கடி இருந்தபோதிலும், விளையாட்டுத் துறையில் தனது பயணத்தைத் தொடரும் அதே வேளையில், அவர் தமிழ்நாடு காவல்துறையில் காவலராகவும் பணியாற்றி வருகிறார்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த நடுத்தர தொலைவு ஓட்டப்பந்தய வீராங்கனை ஒருவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றிருப்பது மாநிலத்தின் தடகள வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

First Published :

Jun 26, 2026 12:44 PM IST

Read More

Previous Post

திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம்.. வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்.. 250ஐ நெருங்கும் உயிரிழப்புகள்! | Venezuela Earthquake Death Toll Rises to 235; Govt Allocates $200 Million for Caracas Reconstruction

Next Post

விதை விற்பனையாளர்களுக்கு செக்… வேளாண் துறை போட்ட அதிரடி கண்டிஷன் | Agriculture Stories Photogallery (வேளாண்மை போட்டோகேலரி)

Next Post
விதை விற்பனையாளர்களுக்கு செக்… வேளாண் துறை போட்ட அதிரடி கண்டிஷன் | Agriculture Stories Photogallery (வேளாண்மை போட்டோகேலரி)

விதை விற்பனையாளர்களுக்கு செக்... வேளாண் துறை போட்ட அதிரடி கண்டிஷன் | Agriculture Stories Photogallery (வேளாண்மை போட்டோகேலரி)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin