19 வயதிலேயே மாதம் ரூ.1 கோடி வருமானம் தரும் பிஸ்னஸ்..!! AI-க்கு தான் நன்றி சொல்லனும்..!!
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பலதுறைகளிலும் கால் பதித்துவிட்டது. ஏஐ என்னுடைய வேலையை பறித்துவிட்டது என பலரும் புலம்பும் நிலையில் அந்த ஏஐ தொழில்நுட்பத்தை சாதகமாக பயன்படுத்தி சாதிப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒரு 19 வயது சிறுவன் ஏஐ பயன்படுத்தி ரூ.1 கோடி வருமானம் தரும் பிஸ்னஸை தொடங்கி நடத்தி ஆச்சர்யம் தருகிறார்.
19 வயதான ஆயுஷ் சிங் (Ayush Singh) தான் சமூகவலைதளங்களில் டிரெண்டாக இருக்கும் ஒரு பெயர். செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மாதம் ரூ. 1 கோடி வருமானம் ஈட்டும் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறி இருக்கிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது, ஆயுஷுக்கு வயது 13 தான் ஆனது. அந்த வயதில் தன்னுடைய குடும்பம் நிதி நெருக்கடியை சந்தித்தை கண்ட ஆயுஷ் குடும்பத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என முயன்றார்.

அந்த சமயத்தில் அவரிடம் இருந்தது ஒரு பழைய லேப்டாப், சீரற்ற இணைய வசதி மற்றும் ஆர்வம் மட்டும் தான். ஐஐடி அல்லது எம்ஐடி போன்ற புகழ்பெற்ற கல்லூரிகளில் படிக்காமலேயே, இணையத்தில் கிடைத்த பழைய பாடத்திட்டங்களைக் கொண்டு அவரே சொந்தமாக மெஷின் லேர்னிங் (Machine Learning) கற்றுக்கொண்டார். சில மாதங்களிலேயே அவர் வெளிநாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

தனது 14ஆவது வயதிலேயே, தான் உருவாக்கிய பாடத்திட்டம் ஒன்றை எம்ஐடி நிறுவனம் பொதுவெளியில் பரிந்துரைக்கும் அளவுக்குத் திறமை பெற்றார். பின்னர் அமெரிக்க ஸ்டார்ட்அப் ஒன்றில் NLP (Natural Language Processing) அமைப்புகளை உருவாக்குதல், டேட்டா சயின்டிஸ்ட் மற்றும் MLOps இன்ஜினியராகப் பணியாற்றியது என தனது அனுபவத்தை படிப்படியாக வளர்த்துக்கொண்டார்.
தன்னுடைய ஏஐ திறனை மற்றவர்களுக்கும் கற்று தரலாம் என முடிவெடுத்த ஆயுஷ், Topmate போன்ற தளங்கள் மூலம் Premium AI Cohorts வகுப்புகளை எடுக்க தொடங்கினார். இந்தச் சரியான வணிக யுக்தியே அவரை மாதம் ரூ. 1 கோடி சம்பாதிக்கும் நிலைக்கு உயர்த்தியது.
பல படைப்பாளிகளிடம் சிறந்த அறிவு இருந்தும், அதை எப்படி பணமாக்குவது என்று தெரியாமல் உள்ளனர். சரியான முறையில் தனது திறமையை வெளிப்படுத்தி, அதற்கேற்ற வணிக மாதிரியை உருவாக்கியதே ஆயுஷின் வெற்றிக்கான ரகசியம். ஆயுஷின் இந்த வெற்றி கதை பல இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், அதே சமயம் தங்களது தொழில் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Topmate நிறுவனத்தின் தலைமை அதிகாரி தினேஷ் சிங் , ஆயுஷின் இந்த வெற்றி கதையை தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ஆயுஷ் குறித்து அவரது திறமை குறித்து பரவலாக பேச வைத்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
