• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தமிழ்நாட்டில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.10,000 குறைந்தது!! 6 மாதங்களில் இல்லாத விலை வீழ்ச்சி!! | Gold prices plunge in Tamil Nadu: 1 soverign falls by ₹10,000 — Best time to buy in June

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தமிழ்நாட்டில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.10,000 குறைந்தது!! 6 மாதங்களில் இல்லாத விலை வீழ்ச்சி!! | Gold prices plunge in Tamil Nadu: 1 soverign falls by ₹10,000 — Best time to buy in June
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ்நாட்டில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.10,000 குறைந்தது!! 6 மாதங்களில் இல்லாத விலை வீழ்ச்சி!!

தமிழ்நாட்டில் தங்கம் விலை 6 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி அடைந்து ஒரு சவரன் 1.05 லட்சமாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. ஜூன் மாதம் தங்க நகை பிரியர்களுக்கு உற்சாகமான ஒரு மாதம் என கூறலாம். அந்த அளவுக்கு ஒரு மாதத்திலேயே தங்கம் விலை பெரிய சரிவை சந்தித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 210 ரூபாய் விலை குறைந்து 13,140 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் விலை 1680 ரூபாய் விலை குறைந்து 1,05,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த திங்கள் முதல் இன்று வரையிலான 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 450 ரூபாயும் ஒரு சவரனுக்கு 3,600 ரூபாயும் விலை குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.10,000 குறைந்தது!! 6 மாதங்களில் இல்லாத விலை வீழ்ச்சி!!

ஜூன் 1ஆம் தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது அதுவே இன்று 1,360 ரூபாய் விலை குறைந்து 13,140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 10,880 ரூபாய் விலை குறைந்துள்ளது. சுமார் 8% தங்கம் விலை குறைந்துள்ளது. இதற்கு முன்பு ஜனவரி 15ஆம் தேதி தான் தங்கம் விலை ஒரு கிராம் 13,140 என்ற விலைக்கு விற்பனையானது. கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பின் தங்கம் விலை இவ்வளவு சரிந்துள்ளது. தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கலுக்கு இதை விட்டால் தங்கம் குறைவாக வாங்குவதற்கு வேறு வாய்ப்பே கிடைக்காது. இன்று தங்கம் வாங்கினால் பல ஆயிரங்களை சேமிக்க முடியும்.

24 கேரட் தங்கமும் இன்றைய தினம் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் 14,335 ரூபாய்க்கும் 10 கிராம் 1,43,350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 10,981 ரூபாய்க்கும் ஒரு சவரன் 87,848 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்றைய தினம் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் 10 ரூபாய் சரிவடைந்து 230 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2,30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரண தங்கத்தை பொறுத்தவரை ஜனவரி மாதம் ஒரு சவரன் 1.33 லட்சத்தை தொட்டது. அதில் இருந்து சுமார் 29,000 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது. அதே போல வெள்ளி ஒரு கிலோ 4.25 லட்சமாக இருந்து தற்போது 2.3 லட்சமாக குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. தற்போது தங்கம் விலை போக்கு இறங்குமுகமாக இருக்கிறது. நீண்ட காலம் இதே நீடிக்காது, மீண்டும் விலை உயர தொடங்கினால் அடுத்த உச்சபட்ச விலையை எட்டி தான் நிற்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold prices plunge in Tamil Nadu: 1 soverign falls by ₹10,000 — Best time to buy in June

6 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி: தமிழ்நாட்டில் தங்கம் விலை சவரன் ரூ.10,000 குறைந்தது!! – Gold prices in Tamil Nadu fell sharply in June, with a 22‑carat sawarn (1 tola) down about ₹10,000 and 22‑carat jewellery rates dropping roughly 8% from early June levels. Chennai rates show 22K at ₹13,140 per gram and 24K at ₹14,335 per gram; silver also eased to ₹230 per gram.

Story first published: Thursday, June 25, 2026, 10:13 [IST]

Other articles published on Jun 25, 2026

Read More

Previous Post

பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்த வி.கே. பாண்டியனின் மனைவி – ஒடிசாவில் முக்கிய நிகழ்வு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

அமோனியா வாயு கசிவு விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்வு | Makkal Osai

Next Post
அமோனியா வாயு கசிவு விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்வு | Makkal Osai

அமோனியா வாயு கசிவு விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்வு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin