Last Updated:
வரும் நாட்களில் இங்கிலாந்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலையாளர்கள் எச்சரித்திருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
போப் ஆண்டவரின் உறைவிடமான வாடிகன் சிட்டியில் உள்ள தேவாலயங்களுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் வெப்பம் தாளாமல் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் காட்சிகள் வெளியாகி வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளன.
கடந்த சில வாரங்களாகவே இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் வாட்டி வருகிறது. அதனால் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இத்தாலி தலைநகர் ரோம், மிலன் உள்ளிட்ட நகரங்களுக்கு அதிக வெப்பத்திற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலையை சமாளிக்க மக்கள் குடைகளுடனும், தண்ணீர் பாட்டில்களுடன்தான் வெளியே செல்கின்றனர்.
இங்கிலாந்தில் வெப்பம் வாட்டி வரும் நிலையில் பள்ளிகளில் அவ்வப்போது ஹோஸ் பைப் மூலம் நீர் தெளித்து ஆசிரியர்கள் குளிர்ச்சி ஊட்டி வருகின்றனர். பெரும்பாலும் வெடவெடக்கும் குளிர் நிலவும் லண்டன் மாநகரம் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலையாளர்கள் எச்சரித்திருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.


