அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி, கட்சியிலிருந்து உடனடியாக விலகியுள்ளார். கட்சிக்குத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்படாமல், தனது மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்த இந்த முடிவு தனக்கு வழிவகுக்கும் என்று புவாட் கூறினார்.
மலாய்க்காரர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் சேவை செய்யும் ஒரு தளமாக நான் நீண்ட காலமாக நேசித்து மதித்து வந்த அம்னோவை இப்போது விமர்சிக்க எனக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளது என்று அவர் இன்று காலை முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளில் ஒரு பெரிய அறிவிப்பு இருக்கும் என்று அவர் சூசகமாகத் தெரிவித்த ஒரு நாள் கழித்து, அம்னோவிலிருந்து அவரது ராஜினாமா வந்துள்ளது.



