• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரக்பி பயிற்சிக்குப் பின் திடீரென மயங்கி விழுந்த படிவம் 2 மாணவர் பரிதாப மரணம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ரக்பி பயிற்சிக்குப் பின் திடீரென மயங்கி விழுந்த படிவம் 2 மாணவர் பரிதாப மரணம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலாக்கா:

தெலோக் மாஸ் (Telok Mas) பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில், இன்று மாலை ரக்பி (Rugby) விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த படிவம் இரண்டு (Form 2) மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று மாலை சுமார் 6:00 மணியளவில் இச்சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரக்பி விளையாட்டுப் பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மாணவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, பயிற்சியாளர் (Coach) வழங்கிய ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த மாணவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைப் பிரிவில் செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்ட மாணவனின் தாத்தா யஹ்யா என்டுட் (64) இச்சம்பவம் குறித்துக் கூறுகையில், பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த தனது பேரன் மயங்கி விழுந்ததாக வந்த அவசர அழைப்பைக் கேட்டுப் பெரும் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். தகவலறிந்தவுடன் அவர் உடனடியாக அலோர் காஜாவிலிருந்து மலக்கா மருத்துவமனைக்கு (Hospital Melaka) விரைந்து வந்தார்.

“அன்று மாலை எனது பேரன் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பயிற்சியாளர் அனைவரையும் ஓய்வெடுக்கக் கூறியுள்ளார்.

மாணவர்கள் அனைவரும் அமர்ந்து பயிற்சியாளரின் அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, பேரன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் கடுமையான சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துவிட்டார்.”

அவருக்கு முன்னதாக எவ்வித உடல்நலக் குறைபாடுகளும் இருந்ததில்லை என்றும், விடுதி வாழ்க்கையிலோ அல்லது உடல்நிலோ தனக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாக அவர் ஒருபோதும் குடும்பத்தினரிடம் கூறியதில்லை என்றும், அதனால் இந்தத் திடீர் மரணம் தங்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்துள்ளதாகவும் யஹ்யா கண்ணீருடன் தெரிவித்தார்.

பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், மாணவனின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக அவரது சொந்தக் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சோகச் சம்பவத்தை மலக்கா மாநிலக் கல்வி, உயர் கல்வி மற்றும் மத விவகாரக் குழுவின் தலைவர் டத்தோ ரஹ்மத் மாரிமான் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். தெலோக் மாஸ் பள்ளியில் ரக்பி பயிற்சிக்குப் பிந்தைய ஆலோசனைக் கூட்டத்தின் போது மாணவர் மயங்கி விழுந்து மரணமடைந்தது உண்மைதான் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், மத்திய மலக்கா மாவட்டத் தற்காலிகக் காவல்துறைத் தலைவர், சூப்பிரிண்டெண்டன் ஹலிம் அபாஸ் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியதோடு, இதுகுறித்த விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் காவல்துறையினரால் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தற்போது இச்சம்பவம் குறித்துப் போலீஸார் திடீர் மரண விபத்து (SDR) என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Read More

Previous Post

தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்னைக்கு நகை வாங்குனா ரூ.5,700 சேமிக்க முடியும்..!! | Massive Gold Price Drop in Tamil Nadu — Save up to ₹5,700 on One Sovereign Today

Next Post

பாதாளத்தையும் பார்த்தாச்சு, உச்சத்தையும் தொட்டாச்சு.. சிஎஸ்கே அணியின் பயணம் பற்றி ருதுராஜ்! | CSK: I Have Seen the Rock-Bottom Phases Here says Captain Ruturaj Gaikwad Reflects on CSK’s Setbacks and Promises 2027 Resurgence

Next Post
பாதாளத்தையும் பார்த்தாச்சு, உச்சத்தையும் தொட்டாச்சு.. சிஎஸ்கே அணியின் பயணம் பற்றி ருதுராஜ்! | CSK: I Have Seen the Rock-Bottom Phases Here says Captain Ruturaj Gaikwad Reflects on CSK’s Setbacks and Promises 2027 Resurgence

பாதாளத்தையும் பார்த்தாச்சு, உச்சத்தையும் தொட்டாச்சு.. சிஎஸ்கே அணியின் பயணம் பற்றி ருதுராஜ்! | CSK: I Have Seen the Rock-Bottom Phases Here says Captain Ruturaj Gaikwad Reflects on CSK’s Setbacks and Promises 2027 Resurgence

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin