வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனம் சமீபத்தில் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை வழங்கும் ப்ரீபெய்ட் பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளது. Netflix உடன் இணைந்து மொபைல் டேட்டா, வாய்ஸ் காலிங்ஸ் மற்றும் பிரபல ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மிற்கான அக்சஸை வழங்கும் புதிய 2 ப்ரீபெய்ட் பிளான்களை Vi அறிமுகப்படுத்தி உள்ளது.
வெவ்வேறு யூஸர்களின் டேட்டா தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த இரண்டு புதிய ப்ரீபெய்ட் பிளான்களை Vi அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 2 பிளான்களிலும் Netflix Basic-ற்கான சப்ஸ்கிரிப்ஷன் அடங்கும். இது யூஸர்களை HD குவாலிட்டியில் ஒரு நேரத்தில் ஒரு டிவைஸில் ஸ்ட்ரீமிங் செய்து கொள்ள அனுமதிக்கிறது. யூஸர்கள் தங்கள் விருப்பத்தை பொறுத்து ஸ்மார்ட் ஃபோன், டேப்லெட், டிவி அல்லது கம்ப்யூட்டரில் தங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.
பிளான் விவரங்கள்:
ரூ.998 பிளான்:
இந்த பிளான் 70 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. ஆனால் மும்பை மற்றும் குஜராத்தில் இதே வேலிடிட்டி கொண்ட பிளானின் விலை ரூ.1,099 ஆகும். இந்த பிளான் தினசரி 1.5GB டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இந்த பிளான் முக்கியமாக தங்கள் மொபைல் டிவைஸ்களில் அதிகம் ஸ்ட்ரீம் செய்யும் அல்லது எப்போதாவது பெரிய ஸ்கிரீனில் பார்க்கும் யூஸர்களுக்கு ஏற்ற பிளான் இது.
ரூ.1,399 பிளான்:
இந்த பிளான் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மெசேஜ்கள் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ்களுடன் ஒரு நாளைக்கான டேட்டா 2.5GB-ஆக உள்ளது. குறிப்பாக இந்த பிளான் அதிக டேட்டாவைப் பயன்படுத்தும் யூஸர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் பெரிய ஸ்கிரீனில் அடிக்கடி ஸ்ட்ரீமிங் செய்ய விரும்பும் யூஸர்களுக்கு ஏற்ற பிளான் இது.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, ரூ.1,000-க்கு குறைவான நெட்ஃபிளிக்ஸ் அக்சஸிற்கு மிகவும் மலிவு விலை திட்டமாக ரூ.998 திட்டத்தை Vi அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே Netflix அக்கவுண்ட்டை வைத்திருக்கும் யூஸர்கள் மற்றும் இன்னும் Netflix அக்கவுண்டை உருவாக்காதவர்கள் என இரு தரப்புமே இந்த பிளானிற்கு தகுதியுடையவர்கள்.
இரன்டு பிளான்களுமே Vi-ன் “ஹீரோ” பெனிஃபிட்ஸ்களுடன் வருகின்றன. எனினும் இந்த பெனிஃபிட்ஸ்களின் சரியான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. டேட்டா டிலைட் (கூடுதல் டேட்டா ஒதுக்கீடு), Night Binge (இரவு நேர ஸ்ட்ரீமிங்கிற்கான போனஸ் டேட்டா) மற்றும் வீக்எண்ட் டேட்டா ரோல் ஓவர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கலாம். எதிர்காலத்தில் நெட்ஃபிளிக்ஸ் சந்தாக்களுடன் கூடிய போஸ்ட்பெய்டு பிளான்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் Vi அறிவித்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
