• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஹஜ் பயணம் செல்ல விரும்பும் இஸ்லாமியர்களுக்கு… விண்ணப்பங்கள் வரவேற்பு … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 24, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ஹஜ் பயணம் செல்ல விரும்பும் இஸ்லாமியர்களுக்கு… விண்ணப்பங்கள் வரவேற்பு … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, 2027-ல் ஹஜ் பயணம் செல்ல விரும்பும் தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;

”ஹஜ் 2007-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து முவ்பையிலுள்ள இந்திய ஹஜ் குழுவானது தலல் விண்ணப்பங்களைப் பெற தொடங்கியுள்ளது என்பதை தமிழ் நாடு மாநில ஹஜ் குழு அறிவிக்க விருப்புகிறது. இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2027-ற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22.06.2026 முதல் 20.07.2026 (இரவு11.59 வரை) முடிய ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதவது https//hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) HAJ SUVIDHA” செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக்கொள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் உறுதிமொழிப் படிவத்தை கவனமாகப் படித்து பின்வருவனவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை (புகைப்படங்கள் அல்ல) பதிவேற்ற வேண்டும்:-

அ) விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளுக்கு முன்னரோ அல்லது அன்றோ வழங்கப்பட்டதும், குறைந்தது 31.12.2027 செல்லுபடியாகக்கூடியதுமான இயந்திரத்தால் படிக்கத்தக்க இந்தியக் கடவுச் சீட்டின் (Passport) முன் மற்றும் பின் பக்கங்கள் (1200 x 800 px. JPG/JPEG, 100-500 KB

ஆ) வெள்ளை நிறப் பின்னணிடின் கூய கடவுச்சீட்டு அளவு (480 x 640 px. JPG/JPEG 5-20 KB)

இ) வங்கிப் புத்தகத்தின் (passbook) நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை (cancelled cheque) (590 x 750 px. JPG/JPEG, 80-250 KB மற்றும்

ஈ) முகவரிச் சான்று (590 x 750 px. JPG/JPEG, 80-250 KB)

கடந்த ஆண்டைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் இரண்டு புறப்பாட்டு தளங்களை தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.

2. வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. ஹஜ் 2027-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி https://hajcommittee.gov.in அல்லது (HAJ SUVITHA) செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பாஸ்போர்ட்டுக்காக புதிதாக விண்ணப்பிப்பவர்கள் குடும்ப பெயர்/கடைசி பெயர் ஆகியவற்றை காலியாக விடாமல் கண்டிப்பாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது. மேலும் ஹஜ் 2027-ல் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்படும் புனிதப் பயணிகள் நபர் ஒருவருக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.1,52,300/- செலுத்த தயார் நிலையில் இருப்பதுடன் தங்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட் உள்ளதை உறுதி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3. ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 20.07.2026 ஆகும். மேலும் ஹஜ் பயணிகள் மரணம் அல்லது கடுமையான மருத்துவ நோய் தவிர வேறு கரணத்திற்காக பயணத்தை இரத்து செய்ய நேரிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதனால் விண்ணப்பதார்களுக்கு நிதி இழப்பு ஏற்படக்கூடும். எனவே நான் பயணம் மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள். தங்களை தயார்நிலை மற்றும் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதிப்பாட்டை கவனமாக பரிசீலித்த பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read More

Previous Post

"பொருளாதார மந்த நிலையை விட அணு ஆயுதம் மிகப்பெரிய பேரழிவு" – ஈரான் போர் குறித்து ட்ரம்ப்

Next Post

பெண் சடலத்தை நடக்க வைத்தவரின் நாடகத்தை பாருங்கள்

Next Post
பெண் சடலத்தை நடக்க வைத்தவரின் நாடகத்தை பாருங்கள்

பெண் சடலத்தை நடக்க வைத்தவரின் நாடகத்தை பாருங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin