• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இலவசம்! இலவசம்! இன்னும் 6 மாதங்களுக்கு ரூ.75 கட்டணம் கிடையாது! உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்துவிட்டீர்களா? | UIDAI Announces Free Aadhaar Update Service From July 1

GenevaTimes by GenevaTimes
June 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இலவசம்! இலவசம்! இன்னும் 6 மாதங்களுக்கு ரூ.75 கட்டணம் கிடையாது! உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்துவிட்டீர்களா? | UIDAI Announces Free Aadhaar Update Service From July 1
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலவசம்! இலவசம்! இன்னும் 6 மாதங்களுக்கு ரூ.75 கட்டணம் கிடையாது! உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்துவிட்டீர்களா?

ஆதார் கார்டின் பயன்பாடு எங்கு தான் இல்லை. அரசு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, தனியார் சேவைகளை பெறுவதற்கு என அனைத்திற்கும் ஆதார் கார்டு முதன்மை வகிக்கிறது, ஏன் நீங்கள் உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது கூட ஆதார் கார்டைத் தான் முதலில் கேட்பார்கள். இப்படி முக்கியமாக இருக்கும் ஆதார் கார்டு விவரங்களை துல்லியமாக வைத்திருப்பது அவசியமாகும். அதேபோல உங்களுடைய விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதை உடனடியாக ஆதாரில் அப்டேட் செய்ய வேண்டும். தற்போது UIDAI அதற்கு ஏதுவாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

2026-ஆம் ஆண்டில் ஜூன் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை உங்களுடைய ஈமெயில் ஐடியை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது. தற்போது வரை இந்த சேவைக்கு 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இனி வரவிருக்கும் ஜூலை மாதம் முதல் தொடர்ந்து 6 மாதங்களுக்கு கட்டணம் கிடையாது. ஆதார் வைத்திருப்பவர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்க இதுவரையில் செலுத்தி வந்த ரூ.75 கட்டணத்தை இனி செலுத்த தேவையில்லை.

இலவச சேவை எதில் கிடைக்கும்?: ஆதார் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவே இலவசமாக இந்த சேவையைப் பெறலாம். ஆனால் நீங்கள் ஆதார் மொபைல் ஆப் மூலமாக அப்டேட் செய்தால் மட்டுமே கட்டணம் இலவசம். பிற வழிகளில் அப்டேட் செய்தால் வழக்கம்போல கட்டணம் செலுத்த வேண்டும். UIDAI இணையதளத்தில் புதுப்பித்தால் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும்.

இலவசம்! இலவசம்! இன்னும் 6 மாதங்களுக்கு ரூ.75 கட்டணம் கிடையாது! உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்துவிட்டீர்களா?

ஆதாருடன் மெயில் ஐடியை இணைப்பது ஏன் முக்கியம்?: ஆதாருடன் ஈ-மெயில் ஐடியை இணைப்பதில் சில நன்மைகள் இருக்கிறது. உங்களுடைய ஈமெயிலுக்கு ஆதார் தொடர்பான அறிவிப்புகள் அனுப்பப்படும் மற்றும் தகவல்கள் உங்களை உடனடியாக வந்தடையும். இதன் மற்றொரு முக்கிய நன்மை என்னவென்றால் ஆதாரைப் பயன்படுத்தி ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பயன்பாடு இருப்பதாகத் தெரிய வந்தால் அது குறித்த அறிவிப்புகளை நீங்கள் உடனடியாகப் பெற முடியும்.

இந்த வசதி குறிப்பாக தற்போதைய சூழலுக்கு மிகவும் அவசியம். ஏனெனில் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அடையாள மோசடியால் பலர் லட்சக்கணக்கில் இழந்து வருகின்றனர். உங்களுடைய ஆதார் கார்டை உங்களுக்கே தெரியாமல் பயன்படுத்தி மோசடி செய்வதை நீங்கள் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். எப்படி ஓடிபி சரிபார்ப்புக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி வருகிறதோ? அதேபோல மெயில் சரிபார்ப்பு செய்ய முடியும். இது போன்ற சேவை உங்களுக்கு பல இடங்களில் தேவைப்படும்.

நீங்களும் உங்களுடைய மெயில் ஐடியை இதுவரையில் ஆதார் கார்டில் அப்டேட் செய்யவில்லை என்றால் ஜூலை 1-ம் தேதி முதல் அப்டேட் செய்யலாம்.

உங்கள் மெயில் ஐடி ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?: இதை செய்வதற்கு நீங்கள் UIDAI இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் “மை ஆதார்” என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு “வெரிஃபை ஈமெயில் ஆர் மொபைல் நம்பர்” என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் வெரிஃபை ஈமெயில் அட்ரஸ் என்பதை தேர்வு செய்து உங்களுடைய ஆதார் நம்பர், மெயில் முகவரி, கேப்சா குறியீடு ஆகியவற்றை வழங்கி சப்மிட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். தற்போது உங்களுடைய மெயில் முகவரிக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி-ஐ வழங்கி சப்மிட் செய்தால் போதும். இப்படி செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். அதில் “ஆதார் ஆதன்டிகேஷன் சக்ஸஸ்ஃபுல்” என்று கொடுக்கப்பட்டிருக்கும்.

Share This Article

Story first published: Wednesday, June 24, 2026, 9:42 [IST]

Other articles published on Jun 24, 2026

Read More

Previous Post

இளம்பெண்கள் மீது ஊசி தாக்குதல்.. பலாத்காரம்! மொத்தம் 243 பேர் கைது.. பிரான்ஸ் இசை விழாவில் கொடூரம் | Paris Music Festival Violence: Mass Needle Spiking and Assault Reports Shock France; 243 Arrested

Next Post

ஈரான் போர்: ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க செனட் தீர்மானம் நிறைவேற்றம்|Major Blow to Trump: Senate Backs Anti-Iran War Resolution

Next Post
ஈரான் போர்: ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க செனட் தீர்மானம் நிறைவேற்றம்|Major Blow to Trump: Senate Backs Anti-Iran War Resolution

ஈரான் போர்: ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க செனட் தீர்மானம் நிறைவேற்றம்|Major Blow to Trump: Senate Backs Anti-Iran War Resolution

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin