• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் Vs ரியல் எஸ்டேட் : முதலமைச்சர் விஜய்-இன் சாய்ஸ் எது? விஜய் கற்றுத்தரும் முதலீட்டு பாடம்..!! | Vijay’s Investment Choice: Gold vs Real Estate — What the Tamil Nadu CM’s Portfolio Teaches Investors

GenevaTimes by GenevaTimes
June 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் Vs ரியல் எஸ்டேட் : முதலமைச்சர் விஜய்-இன் சாய்ஸ் எது? விஜய் கற்றுத்தரும் முதலீட்டு பாடம்..!! | Vijay’s Investment Choice: Gold vs Real Estate — What the Tamil Nadu CM’s Portfolio Teaches Investors
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் Vs ரியல் எஸ்டேட் : முதலமைச்சர் விஜய்-இன் சாய்ஸ் எது? விஜய் கற்றுத்தரும் முதலீட்டு பாடம்..!!

பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல அதனை சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும். அப்போது தான் அந்த பணம் நமக்கு பணம் சம்பாதித்து கொடுத்து நம்மை செல்வந்தனாகவே தக்க வைக்கும். இதனால் சினிமா நடிகர் நடிகைகள் சொந்தமாக படம் தயாரிக்கும் நிறுவனம், லைஃப் ஸ்டைல் பிஸ்னஸ் , அழகுசாதன பொருட்கள் மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களை தேடி சென்று முதலீடு செய்கிறார்கள்.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி இருக்க கூடிய தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் தன்னுடைய 52ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். விஜய் தன்னுடைய பணத்தை எதில் எல்லாம் முதலீடு செய்திருக்கிறார், அவர் நமக்கு கற்றுத் தரக்கூடிய முதலீட்டு பாடம் என்ன என்பதை நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தங்கம் Vs ரியல் எஸ்டேட் : முதலமைச்சர் விஜய்-இன் சாய்ஸ் எது? விஜய் கற்றுத்தரும் முதலீட்டு பாடம்..!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சியாக தமிழக வெற்றி கழகம் போட்டியிட்டது. விஜய் மட்டுமே இதன் அடையாளமாக இருந்து முதல் தேர்தலிலேயே வெற்றியை பதிவு செய்துவிட்டது. தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவி வகித்து வருகிறார். விஜய்யை பொறுத்தவரை சினிமாவில் கிடைத்த பெரிய வருமானத்தை விடுத்து அரசியலுக்கு வந்துள்ளார்.

தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனு தாக்கலில் தன்னுடைய சொத்து விவரங்கள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு உள்ள அசையும் சொத்துகள் , அசையா சொத்துகளின் மதிப்பு என்ன எங்கெல்லாம் அதனை முதலீடு செய்திருக்கிறேன் என்பதை விரிவாக தெரிவித்துள்ளார். இவர் மொத்தம் 624 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கிறார்.

விஜய் பொறுத்தவரை தங்கத்தில் பெருமளவு பணத்தை அவர் போடவில்லை. அவரிடம் இருப்பதே 883 கிராம்கள் தங்கம் தான். இவற்றின் மதிப்பு சுமார் 1.2 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். விஜய் பாரம்பரியமான ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்பு தொகை மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய இரண்டிலும் தான் அதிக பணத்தை முதலீடு செய்திருக்கிறார்.

அவர் கையில் ரொக்கமாக 1,10,000 ரூபாய் வைத்திருப்பதாக கூறி இருக்கிறார். இதை தாண்டி தன்னுடைய சொத்தின் பெரும்பகுதியை அவர் வங்கிகளில் நிலையான வைப்பு தொகை திட்டங்களில் தான் பெரிய அளவில் முதலீடு செய்து இருக்கிறார். அந்த வகையில் பார்க்கும்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் மட்டும் 25 கோடி ரூபாயை டெபாசிட் செய்து வைத்திருக்கிறார்.

அதே போல ஆக்சிஸ் வங்கியில் 40 கோடி ரூபாயை நிலையான வைப்புத் தொகையாக முதலீடு செய்து வைத்திருக்கிறார். ஹெச்டிஎஃப்சி வங்கியில் 20 கோடி ரூபாயும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 15 கோடி ரூபாய் நிலையான வைப்புத் தொகை திட்டங்களில் டெபாசிட் செய்துள்ளார். மொத்தமாக அவர் 100 கோடி ரூபாயை நிலையான வைப்புத்தொகையில் மட்டுமே டெபாசிட் செய்துள்ளார்.

அதே போல பல்வேறு வங்கிகளிலும் சேமிப்பு கணக்குகளில் மட்டும் 219.99 கோடி ரூபாயை வைத்திருக்கிறார். நிலையான வைப்பு தொகை, சேமிப்பு கணக்குகள் மூலம் வட்டி வருமானமாக மட்டுமே விஜய்க்கு பல கோடிகள் கிடைக்கும்.

இதைத் தாண்டி ஜெயா நகர் பிராபர்ட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் 19 லட்சம் ரூபாய்க்கு பங்குகளை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 9,600 ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்திருக்கிறார். சன் பேப்பர் மில் நிறுவனத்தில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்திருக்கிறார்.

விஜய் தேசிய சேமிப்பு திட்டம் , அஞ்சலக சேமிப்பு போன்ற எந்த ஒரு திட்டத்திலும் பணத்தை முதலீடு செய்யவில்லை. இதைத் தாண்டி ரியல் எஸ்டேட்டிலும் கணிசமான பணத்தை விஜய் முதலீடு செய்து இருக்கிறார். அவர் வசம் கொடைக்கானலில் வேளாண்மை நிலம் இருக்கிறது. அதேபோல சென்னையில் போரூர், சாலிகிராமம் ,நீலாங்கரை பகுதிகளில் வேளாண்மை அல்லாத பிற நிலங்களை சொந்தமாக வைத்திருக்கிறார் . பாடி , தி நகர், சோழிங்கநல்லூர் , கொப்பூர் ஆகிய பகுதிகளில் வணிக கட்டிடங்களை தனக்கு சொந்தமாக வைத்திருக்கிறார். நீலாங்கரை, சாலிகிராமம் ,மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் பள்ளிப்பட்டு , கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகளை விஜய் வாங்கி வைத்திருக்கிறார்.

மேலும் தனக்கு திரும்ப செலுத்த வேண்டிய கடன்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். கடன் இல்லை, பணமும் நிலையான பாதுகாப்பான வருமானம் தரும் வைப்பு தொகை திட்டங்களில் முதலீடு செய்துள்ளார். விஜய் பொறுத்தவரை வளர்ச்சிக்கு ரியல் எஸ்டேட் முதலீடுகளையும், பாதுகாப்புக்கு வங்கி எஃப்டி முதலீடுகளையும் நம்பியுள்ளார். பெரிய அளவில் ரிஸ்க் எடுக்காமல் பணத்தை பாதுகாக்கும் வழிமுறையே விஜயின் இன்வெஸ்ட்மெண்ட் ஸ்டைலாக உள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Vijay’s Investment Choice: Gold vs Real Estate — What the Tamil Nadu CM’s Portfolio Teaches Investors

தங்கம் Vs ரியல் எஸ்டேட் : முதலமைச்சர் விஜய்-இன் சாய்ஸ் எது? விஜய் கற்றுத்தரும் முதலீட்டு பாடம்..!!-Tamil Nadu’s Chief Minister Vijay, celebrating his 52nd birthday, holds total declared assets around ₹624 crore with modest gold holdings (883 g ≈ ₹1.2 crore) but heavy allocations in fixed deposits and real estate across Chennai and suburbs.

Story first published: Monday, June 22, 2026, 7:58 [IST]

Other articles published on Jun 22, 2026

Read More

Previous Post

இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்… இனி டெக்ஸ்ட் மட்டும் அல்ல, புகைப்படத்திலும் ரிப்ளை! | Makkal Osai

Next Post

பண்டார் சன்வே அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டு மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் | Makkal Osai

Next Post
பண்டார் சன்வே அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டு மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் | Makkal Osai

பண்டார் சன்வே அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டு மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin