Tamilnadu
oi-Vigneshkumar
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் 17வது கூட்டத்தொடரின் 4வது நாள் கூட்டம் இன்று கூடியுள்ளது. கடந்த இரு நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் பதிலளித்து பேசி வருகிறார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் நேற்றைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார். அப்போது விஜய் அரசு மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு விஜய் இன்று உரிய பதிலை அளிப்பார் என தெரிகிறது.


ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய்யின் பதிலுரை நிறைவடைந்தது!
பேசு பேசு என்று சொல்கிறார்கள். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டது- முதல்வர் விஜய்

நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இந்த அரசை Evils என்று பொருள்படும் வகையில் பேசியிருந்தார். நான் ஒன்றை மட்டுமே சொல்லி கொள்கிறேன். Evils பற்றி Devils பேசக்கூடாது- முதல்வர் விஜய்
சட்டசபையில் கருணாநிதி படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது, திமுக ஆட்சியில் தமிழ் தாய் வாழ்த்து 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. முதலில் தேசிய கீதம், பிறகே தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது நிகழ்ச்சியின் இறுதியிலும் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது- முதல்வர் விஜய் விளக்கம்
வாக்களித்த மக்கள் பற்றி அவதூறு பரப்புகிறார்கள். எம்ஜிஆர் ஆட்சி முதல் இப்போது வரை அவர்கள் இதே டெக்னிக்கை தான் பின்பற்றி வருகிறார்கள். இப்போது தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது- முதல்வர் விஜய்
தவெக ஆட்சி திமுக தயவால் நடக்கவில்லை.. மக்கள் தயவால் தான் நடக்கிறது. நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்கிறார்கள். பிறகு அவர்களுக்கு அமைச்சர் பதவி தந்தால் ஏன் கதறுகிறீர்கள். சோபா மாடல் என்ன என்று புரியவே எனக்கு ரொம்ப நாள் ஆனது. சோபா, டேபிள் செட் வியாபாரத்தை வெளியே பாருங்கள்- முதல்வர் விஜய்
மக்கள் பணத்தை ஒரு பைசா கூட நாங்கள் தொட மாட்டோம்.. மக்கள் பணத்தை யாரும் தொட விட மாட்டோம்.. தொட்டவர்களையும் விட மாட்டோம்- முதல்வர் விஜய்

முதல்வர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்!

முதல்வர் விஜய் பேசுவதை நாங்கள் பொறுமையாகக் கேட்டு வந்தோம். ஆனால், முதல்வர் உண்மைக்குப் புறம்பாக சில தகவல்களைச் சொல்கிறார். ஆதாரத்தோடு பேசினால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், ஆதாரத்தோடு பேசுங்கள்- முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பதில்

நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது, ஓரிரு முறை மட்டுமே அமைச்சர்கள் குறுக்கிட்டனர். ஆனால், இன்று முதல்வரை பேச விடாமல் தடுக்கிறார்கள். முதல்வர் பேச மறுக்கிறார் என்று கடந்த சில நாட்களாக திமுகவினர் சொன்னார்கள். ஆனால், இப்போது பேச ஆரம்பித்தவுடன் பேச விடாமல் தடுக்கிறார்கள்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

திமுகவினர் எங்களை பார்த்து ஒருமையில் பேசுகிறார்கள். அதை கண்டிக்கிறோம்.. திமுக உறுப்பினர்களின் வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்- அமைச்சர் ராஜ்மோகன்
முதல்வர் விஜய் பேசி முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும்- சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன்

டாஸ்மாக் குறித்து முதல்வர் விஜய் பேச தொடங்கிய போது சட்டசபையில் அமளி. டாஸ்மாக் நிதி தொடர்பான முதல்வர் விஜய் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு. திமுக- தவெக உறுப்பினர்களுக்கு இடையே அமளி!
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு போதை பொருள் தான் காரணம். கடந்த ஆட்சியில் போலீஸ் துறையை வைத்திருந்த முதல்வர், உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டனர். சட்ட ஒழுங்கு குறித்து நிச்சயம் யார் வேண்டும் என்றாலும் பேசலாம்.. இது மன்னராட்சி இல்லை! மக்களாட்சி- முதல்வர் விஜய்
சட்ட ஒழுங்கு பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் அவதூறு அரசியல் செய்கிறார்கள். கடந்த 10 மாதங்களாக தமிழகத்தில் சட்ட ஒழுங்கு டிஜிபி-யே இல்லை. தவெக ஆட்சியில் தான் டிஜிபி நியமனம் செய்யப்பட்டார்- முதல்வர் விஜய்
நீட் தேர்வு கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். +2 மார்க் அடிப்படையில் மருத்துவத்திற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கை- முதல்வர் விஜய்
மத்திய அரசுடன் தேவையில்லாமல் மோதலில் ஈடுபட மாட்டோம். நாம் மக்களுடன் தான் கூட்டணி வைத்திருக்கிறோம். கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை. நமக்கு தமிழகத்தின் வளர்ச்சி தான் முக்கியம்- முதல்வர் விஜய்
எல் நினோ காரணமாக இந்த வருடம் மழை குறைவாக தான் இருக்கும் அதை நமது விவசாயிகளும் உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்- முதல்வர் விஜய் பேச்சு
கடந்த ஆட்சியில் நடந்த நிர்வாக கோளாறு காரணமாகவே மின்வெட்டு நிகழ்கிறது. வேண்டும் என்றே சிலர் செய்யும் நடவடிக்கைகளால் மின்வெட்டு ஏற்படுகிறது.. மின் தடையை சீரமைக்க ரோந்து வாகனம் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மின்மாற்றி உள்ளிட்ட சாதனங்களில் ஏற்படும் கோளாறு காரணமாகவே மின்வெட்டு நிகழ்கிறது. விரைவில் மின்வெட்டு பிரச்சினை சரி செய்யப்படும்- முதல்வர் விஜய்

எங்கள் சட்டசபை உறுப்பினர்கள் எல்லாம் புதியவர்கள் தான்! எங்களுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மக்கள் சேவை செய்ய தான் தெரியும். மக்கள் பணத்தை ஏமாற்றத் தெரியாது. மக்கள் பணி செய்யவே தெரியுமே தவிர மக்கள் பணத்தைச் சுருட்டத் தெரியாது. கோயில் பணத்தை, கனிம வளங்களை கொள்ளையடிக்க தெரியாது தான்- முதல்வர் விஜய்
“நமக்கு எதிராக யாருமே எதிர்பார்க்காத நபர்கள் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள்” என திமுக, அதிமுகவை விமர்சித்த முதல்வர் விஜய்!
காசு கொடுத்து வாக்கு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை அடைத்துள்ளோம். ஒரே குடும்பம் மட்டுமே முக்கியம் என்பது எங்கள் கொள்கை இல்லை.. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்பதை சொல்லும் ஆட்சி இது- முதல்வர் விஜய்
கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்தது பெரும் வேதனை அளிக்கிறது. அது ஒருபோதும் மனதில் இருந்து ஆறாது. கரூர் விவகாரத்தில் என் மீது பழி போட்டனர். அதை என்னவென்றே சொலவது என்றே தெரியவில்லை- விஜய்
பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்டோம்.. ஆனால், அவரது கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தோம்- முதல்வர் விஜய்

திரைப்படங்களிலேயே ஊழல் எதிர்ப்பு, சமூக நீதி, குறித்து பேசினோம்.. அரசியலை பற்றிப் பேசியதாலேயே எனது திரைப்படங்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தன. சந்தித்து வருகிறது. கட்சி ஆரம்பித்த உடனேயே சிஏஏவுக்கு எதிராக அறிக்கை விட்டோம்- முதல்வர் விஜய்
நடிகனாக வாழ்க்கையை ஆரம்பித்தாலும் பல நிலைகளை கடந்தே இந்த நிலைக்கு வந்துள்ளோம். 1990களில் ரசிகர் மன்றமாக இருந்தபோதே மக்களுக்கு துணையாக நின்றோம்- முதல்வர் விஜய்
எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி நினைத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் வணக்கம் – முதல்வர் விஜய்
வரலாற்று சிறப்புமிக்க சட்டசபை இது. மாநிலம் சார்ந்த பிரச்சினைகளில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்- முதல்வர் விஜய்

சட்டசபையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்து முதல்வர் விஜய் பேசி வருகிறார்

சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது!
READ MORE

