• Login
Sunday, June 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரிட்டனில் ஆளும் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல்: பதவி விலகுகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்…!

GenevaTimes by GenevaTimes
June 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரிட்டனில் ஆளும் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல்: பதவி விலகுகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 பிரிட்டனில் ஆளும் தொழிலாளர் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நாளை (ஜூன் 22) தனது பதவியிலிருந்து விலகக்கூடும் என பிரிட்டனின் The Observer என்ற பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





2024 பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் ஆனார்.

ஆனால் அரசின் கொள்கைகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகள் காரணமாக மக்கள் ஆதரவு அவருக்கு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறைந்துள்ள மக்கள் ஆதரவு

தொழிலாளர் கட்சியின் மொத்த எம்பிகளில் கால் பகுதியினர் ஸ்டார்மர் பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.



இந்நிலையில் விரிவான பேச்சுவார்த்தைக்கு பிறகு, தான் பிரதமர் பதவியில் நீடிப்பது இனி உகந்ததல்ல என்ற முடிவுக்கு ஸ்டார்மர் வந்துள்ளதாக The Observer தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் ஆளும் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல்: பதவி விலகுகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...! | Uk Politics Keir Starmer May Resign As Pm


எனவே நாளை (திங்கள்கிழமை) அதிகாலைக்குள் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஸ்டார்மர் தனது பதவி விலகல் முடிவை அறிவிக்கலாம் என Observer தெரிவித்துள்ளது


எனினும் அரசுத் தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், “பிரதமர் ஸ்டார்மர் இன்னும் தனது அரசாங்கப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்; அவர் பதவியிலிருந்து விலகும் எண்ணத்தில் இல்லை” எனத் தெரிவித்துள்ளன.

 அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு

இதேவேளை பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியிலிருந்து விலகுவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ஆளும் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல்: பதவி விலகுகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...! | Uk Politics Keir Starmer May Resign As Pm



மிகவும் முக்கியமான இரண்டு விடயங்களான குடிவரவு மற்றும் எரிசக்தி ஆகிய முக்கிய இரண்டு துறைகளில் அவர் மோசமாகத் தோல்வியடைந்துள்ளார் என்று ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.



அத்துடன் ஸ்டார்மருக்குத் தமது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.         

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

 

Read More

Previous Post

பழைய காயங்கள், விடைதெரியாத கேள்விகள்:  முதியோர் இல்லத்தில் 64 வயது முதியவர் மரணம்: காவல்துறை விசாரணை | Makkal Osai

Next Post

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளராகும் கவுன்சிலர்? பொறுப்பை ஏற்ற அனிதா ராதாகிருஷ்ணன்! | DMK: Anitha Radhakrishnan Guarantees DMK Win as Party Eyes Christian Nadar Candidate in the Ambasamudram By-Poll

Next Post
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளராகும் கவுன்சிலர்? பொறுப்பை ஏற்ற அனிதா ராதாகிருஷ்ணன்! | DMK: Anitha Radhakrishnan Guarantees DMK Win as Party Eyes Christian Nadar Candidate in the Ambasamudram By-Poll

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளராகும் கவுன்சிலர்? பொறுப்பை ஏற்ற அனிதா ராதாகிருஷ்ணன்! | DMK: Anitha Radhakrishnan Guarantees DMK Win as Party Eyes Christian Nadar Candidate in the Ambasamudram By-Poll

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin