டெஹ்ரான், மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடியதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
லெபனான் மீதான தாக்குதலை தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்ததால் அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே அமெரிக்கா தலையீட்டால் இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் இடையே நேற்று மாலை போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த போதிலும் இன்று அதிகாலை தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. நபாதியா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்களும் டிரோன்களும் தொடர் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் குடியிருப்பு கட்டிடங்களும் வீடுகளும் அழிக்கப்பட்டதாகவும் லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 5 பேர் பலியானதாகவும் தெரிவித்து உள்ளது.



