ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், லஹிரி மகாசாயர் போன்ற மாபெரும் யோகிகளும் ஞானிகளும் வாழ்ந்த இந்த ஆன்மீக வளம் நிறைந்த வங்காள மண்ணில் கூட்டு யோகா பயிற்சி செய்வது ஒரு தனித்துவமான ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. அதேபோல இந்தியாவில், இமயமலையிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரையிலும், வங்காளத்திலிருந்து சௌராஷ்டிரா வரையிலும், நாடு முழுவதும் யோகாவின் ஆற்றலால் நிறைந்திருப்பதை நான் உணர்கிறேன்.


