சென்னை, தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பினால், ஆதாரங்களுடன் பதிலடி தர தயாராக இருப்பதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தவெக சார்பில் பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
சட்டசபையில் பதிலடி
மருத்துவ முகாமினை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கீர்த்தனா சிவகாசியில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக தொழில்துறை வளர்ச்சிக்காக தென்கொரிய நாட்டின் ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய மறு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பிற சர்வதேச நிறுவனங்களிடமும் முதலீடு தொடர்பான ஒப்பந்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஆட்சிக்கு வந்த சில நாட்களிலிலேயே ஏராளமான நிறுவனங்களை பார்த்து, தொழில் முதலீடு ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
The post முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றுவிட்டதா? ஆதாரங்களுடன் பதிலடி தர தயார் – அமைச்சர் கீர்த்தனா appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.
