சமீப நாட்களாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இந்த அச்சங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, நாட்டின் எரிபொருள் விநியோகம் முற்றிலும் இயல்பாக உள்ளது என்று தெளிவுபடுத்தியது. நாட்டின் எந்தப் பகுதியிலும் எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு இல்லை எனக் கூறியது.

