மோதல் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, ரஷ்யாவின் ட்யூமென் பகுதியில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் மூர் இன்று(20)சனிக்கிழமை தெரிவித்தார்.
ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான ட்யூமென் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலை வான் பாதுகாப்புப் படைகள் முறியடித்ததாக மூர் குறிப்பிட்டார்.
தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது
ட்யூமென் சுத்திகரிப்பு ஆலை மீது ஆளில்லா வான்வழி விமானங்கள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகள் விழுந்த இடத்தில் அவசரகால சேவை நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர்.
“முதற்கட்ட தகவல்களின்படி, ஆலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை, மேலும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்,” என்று மூர் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.
உக்ரைனில் இருந்து 2000 கிலோமீ்றர் தொலைவு
நிலைமையை தாம் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.
ட்யூமென் பகுதி, உக்ரைனில் உள்ள போர்முனையிலிருந்து சுமார் 2,000 கிலோமீட்டர் (1,240 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்த செய்தி பற்றி உக்ரைன் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ரஷ்யாவின் மிக முக்கியமான பொருளாதாரத் துறைகளில் ஒன்றான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து தனது நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கீவ் முன்னதாகக் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

