வடமேற்கு மாகாணத்தில் உயர் பதவி வகித்த ஒரு முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதி, பணச்சலவைச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடங்கப்பட்ட விசாரணைகளில் இருந்து தப்பிப்பதற்காக நாட்டை விட்டுத் தப்பி ஓடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு 07பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஆடம்பர மாளிகையை அவர் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அவர் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்.
ஆடம்பர வீடு வாங்கியதால் ஆரம்பமான விசாரணை
இந்த அரசியல்வாதி கேள்விக்குரிய வீட்டை வாங்குவதற்குத் தனது அடையாளத்தைப் பயன்படுத்தினாரா, அல்லது அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் மற்ற சக்திவாய்ந்த பிரமுகர்களின் பெயர்களைப் பயன்படுத்தினாரா என்பதைக் கண்டறிய ஒரு விரிவான சிறப்பு விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

