Last Updated:
இஸ்ரேல் – ஹெசாபுல்லா இடையே போர் நிறுத்தம் கையெழுத்தானதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
லெபனான் – இஸ்ரேல் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஹெசபுல்லா குழு முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், மேற்கு ஆசிய போரை முடிவுக்குக் கொண்டு வர கடந்த 17ஆம் தேதி அமெரிக்கா ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் லெபனான் உட்பட அனைத்து பிராந்தியங்களிலும் ராணுவ நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்த ஈரான் வலியுறுத்தியது. இருப்பினும், ஹிஸ்புல்லா – இஸ்ரேல் இடையே பரஸ்பரம் மோதல் தொடர்ந்தது. தெற்கு லெபனானில் உள்ள நபாத்தியா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் படுகாயம் அடைந்ததாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
כפי שהנחיתי – צה״ל תקף בעוצמה 150 מטרות של חיזבאללה בלבנון וחיסל עשרות מחבלים. pic.twitter.com/oCbBzuP61K
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) June 19, 2026
இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் கத்தார் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையின் விளைவாக இஸ்ரேல் – லெபனான் இடையே போர் நிறுத்தம் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தெற்கு லெபனானின் பல்வேறு பகுதிகளில் வான்வழித் தாக்குதல் தொடர்ந்ததாக உள்ளூர் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


